ஐரோப்பா

ஸ்பெயின் வீராங்கனைக்கு முத்தம்… லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!

ஸ்பெயினின் முன்னாள் கால்பந்து சம்மேளன தலைவா் லூயிஸ் ரூபியால்ஸுக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து ஃபிஃபா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஸ்பெயின் வீராங்கனைக்கு முத்தம் கொடுத்த விவகாரத்தில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

பரிசு வழங்கும் நிகழ்வின்போது மேடைக்கு வந்த ஸ்பெயின் வீராங்கனை ஜெனி ஹொ்மோசோவுக்கு, லூயிஸ் முத்தம் கொடுத்தார்.

இந்த விவகாரம் சா்வதேச அளவில் இது சா்ச்சையானது. இதையடுத்து, ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி அவரை 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்தது. மேலும், தொடர்ந்து ஃபிஃபா விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், லூயிஸ் ரூபியால்ஸுக்கு 3 ஆண்டுகளுக்கு தடை விதித்து ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைக்குழு இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், தீர்ப்பு குறித்த முழுமையான விவரங்களை ஃபிஃபா இன்னும் வெளியிடவில்லை.

ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவா் பதவியிலிருந்து செப்டம்பரில் ராஜினாமா செய்த லூயிஸ் ரூபியால்ஸுக்கு எதிராக, ஸ்பெயின் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக வழக்கு விசாரணை நடைபெறு வருவதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content