இங்கிலாந்தில் முதல்முறையாக அமைக்கப்படவுள்ள ஜெகநாதர் கோயில் ..
இங்கிலாந்தில் முதல்முறையாக ஜெகநாதர் கோயில் அமைக்கப்படவுள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தில் முதல் ஜெகநாதர் கோவில் அமைய உள்ளது. கோவிலின் முதல் கட்டப் பணிகள் 2024ம் ஆண்டு இறுதிக்குள் முடிவடைய உள்ளது.
இதற்காக தொழிலதிபர் பிஸ்வநாத் பட்நாயக், இங்கிலாந்தில் முதல் ஜெகநாதர் கோயில் கட்டுவதற்கு, இங்கிலாந்து தொண்டு நிறுவனத்திற்கு ரூ.250 கோடி வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார்.
இது நான் அந்த கோவிலை கட்டுவதற்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய நன்கொடை என்று சொல்லப்படுகிறது. பிரித்தானியாவில் இந்த முதல் ஜெகநாதர் ஆலயத்தை நிறுவுவது அக்ஷைய திருதியை கொண்டாட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டது.
இது குறித்த மாநாட்டு நிகழ்ச்சியில், இங்கிலாந்திற்கான துணை இந்திய உயர் ஸ்தானிகர் சுஜித் கோஷ் மற்றும் இந்தியாவின் அமைச்சர் (கலாச்சாரம்) அமிஷ் திரிபாதி ஆகியோர் கலந்து கொண்டனர். கஜபதி மகாராஜா திப்யசிங்க தேப், பூரியின் மகாராஜா, மகாராணி லீலாபதி பட்டமஹதேய் ஆகியோரும் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சியில் பட்நாயக் பாராட்டப்பட்டார். அப்போது அவர் பேசுகையில், ஜெகநாதரின் பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கோவிலை கட்ட ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டார்.