இலங்கை

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பகுதியில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் இன்று நண்பகல் முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இரும்பு பாதுகாப்பு வேலிகள் கொண்டு வரப்பட்டு அங்கு விசேட அதிரடிப் படையினரும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில் போராட்டம் இடம்பெறலாம் எனும் அச்சுறுத்தல் காரணமாக குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழந்தமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் மீது உறவினர்கள் குற்றஞ்சாட்டும் நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் வட்டுக்கோட்டை பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஒரு விசாரணையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தினால் பிறிதாக ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content