Site icon Tamil News

தாக்குதல்களை தீவிரப்படுத்த இஸ்ரேல் இராணுவம் தீர்மானம்

காஸா பகுதியில் இன்று (22) முதல் தாக்குதல்களை தீவிரப்படுத்த இஸ்ரேல் இராணுவம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் கட்டங்களில் தமது படைகள் எதிர்கொள்ளும் அபாயங்களை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, வடக்கு காஸா பகுதியில் பொதுமக்கள் தொடர்ந்தும் தங்கியிருந்தால் உடனடியாக தெற்கு பகுதிகளுக்கு செல்லுமாறும் அவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், காஸா மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகளுக்காக ரஃபா நுழைவாயில் நேற்று திறக்கப்பட்டது.

காஸா பகுதியில் தண்ணீர், உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இன்றி நெருக்கடியை எதிர்கொண்ட பெருந்தொகையான மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில்.

அந்தப் பொருட்களை வழங்குவதற்கு எல்லைகளைத் திறக்க இஸ்ரேல் மறுத்த பின்னணியில், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க ஒரே வழி எகிப்திய-காஸா எல்லையில் உள்ள ரஃபா நுழைவாயில் வழியாகும்.

எனினும், இந்த உதவித்தொகை போதுமானதாக இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

மோதல்கள் காரணமாக, இரு நாடுகளிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 5800 ஐத் தாண்டியுள்ளது மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,900 க்கும் அதிகமாக உள்ளது.

Exit mobile version