இஸ்ரேலுக்கு பதிலடி உறுதி – மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய ஈரான்
இஸ்ரேலின் அத்துமீறல்களுக்குப் பதிலடிக் கொடுத்தாகவேண்டும் என்று ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தன்னைத் தற்காத்துகொள்ளும் உரிமையைச் செயல்படுத்துவதைத் தவிர தெஹ்ரானிற்கு வேறு வழி இல்லை என்று ஈரானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் கூறினார்.
வட்டாரத்தில் பூசல் ஏற்படுவதைத் தடுக்க தங்களால் இயன்ற முயற்சிகளை ஏற்கனவே எடுத்திருப்பதாக அவர் சொன்னார்.
ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) கொல்லப்பட்டதற்குச் சரியான நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்மாயில் ஹனியேவின் கொலைக்கு இஸ்ரேல் காரணம் என்று ஈரானும் ஹமாஸ் குழுவும் குறைகூறுகின்றன. அதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று இருதரப்பும் உறுதிகூறியிருக்கின்றன.