இந்தியா

பட்டியலில் உள்ளவர்களை விசாரித்தால் ஆதாரங்கள் கிடைக்கும்- விசாரணையில் தனபால் பேட்டி

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இரண்டாவது முறையாக கோவை CBCID அலுவலகத்தில் கனகராஜின் சகோதரர் தனபால் விசாரணைக்காக ஆஜரானார். சுமார் ஆறு மணி நேரம் விசாரணை முடிந்து வெளியில் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 50க்கும் மேற்பட்ட நபர்களின் list கொடுத்துள்ளேன் அதில் ஒரு சில நபர்களை விசாரித்துள்ளார்கள். அதில் அவர்கள் கூறியதற்கும் நான் கூறியதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பினார்கள். கனகராஜன் இறப்பு அதற்கு முன்பு என்ன நடந்தது என்பது குறித்து புதிதாக 62 கேள்விகளை என்னிடம் எழுப்பினார்கள் நான் அதற்கான பதிலை தெரிவித்தேன். தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமியை இது சம்பந்தமாக குறிப்பிட்டு பேசக்கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்துள்ளது எனவே அவரைப் பற்றி நான் எதுவும் சொல்ல தயாராக இல்லை. தற்பொழுது 62 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் கடந்த முறை 50க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டது.

தற்பொழுது நடைபெற்ற விசாரணையும் திருப்தியாக இருந்தது. மீண்டும் ஆஜராகும்படி எந்தவித சம்மனும் வழங்கப்படவில்லை. எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் நான் மன நலம் பாதிக்கப்பட்டவன் என்று கூறுவதை என்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. நான் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களை விசாரித்தால் ஆதாரங்கள் வெளிவரும். என்னுடைய இல்ல விழாவில் சுரேஷ்குமார் கலந்து கொண்டுள்ளார் அதற்கான புகைப்படங்களும் என்னிடம் உள்ளது.

See also  ‘சலோ இந்தியா’திட்டம் : OIC கார்டுதாரர்களின் நண்பர்களுக்கு ஒரு லட்சம் இ-விசா வழங்க அரசு முடிவு

Kodanadu murder, robbery case: Adjourned to October 28 | கோடநாடு கொலை, கொள்ளை  வழக்கு: அக்டோபர் 28-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

சுரேஷ்குமார் தான் 24 மணி நேரத்தில் குறைந்தது நான்கில் இருந்து 5 மணி நேரம் என்னுடைய தம்பி கனகராஜிடம் பேசுவார். என்னுடைய தம்பியும் அவரிடம் நன்கு பேசுவார் சென்னை சென்றாலும் இருவரும் ஒரே அறையில் எடுத்து தங்குவார்கள் ஒன்றாகவே மது அருந்திவிட்டு வரும் வரை ஒன்றாகத்தான் இருப்பார்கள். கனகராஜ் உயிரிழந்த பொழுது மது அருந்தி உள்ளார். அளவுக்கு அதிகமாக ஊற்றி கொடுத்து அந்த இடத்திலேயே விபத்து நடத்தினார்கள் அல்லது உடன் இருந்தவர்கள் வேறு இடத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு இங்கு கொண்டு வந்து போட்டார்கள் என்பது குறித்து முழுமையாக தெரியவில்லை விசாரணையில் தெரியவரும்.

சுரேஷ்குமார் என்னுடைய தம்பி இருந்த சம்பவ நேரத்தில் இல்லை ஆனால் சுரேஷ்குமார் இருதரப்பிலும் பாலமாக செயல்பட்டார். மது அருந்திய நேரத்தில் 10 பேர் இருந்துள்ளார்கள், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இளங்கோவனின் தீவிர விசுவாசியை சொல்லலாம். மனநிலை சரியில்லை எனக்கு ஜாமின் வழங்கும் படி நான் எப்பொழுதுமே கேட்டதில்லை. தூக்கம் வராததால் தான் நான் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்கிறேன் என்றார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content