Tamil News

கனடாவில் இந்திராகாந்தியின் படுகொலை நிகழ்வு; அமைச்சர் அலி சப்ரி கண்டனம்

கனடாவில் , இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் படுகொலையை பொதுவில் புகழும்விதத்தில் இடம்பெற்ற நிகழ்வு தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடும் கண்டனம்வெளியிட்டுள்ளார்.

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இந்திராகாந்தியின் படுகொலையை புகழும் விதத்தில் பொதுவெளியில் நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்துள்ள அலிசப்ரி, கருத்துசுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மையை போற்றுதல் என்ற போர்வையில் எந்த நாடும் பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகளிற்கு புகலிடம் வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் இந்திராகாந்தியின் படுகொலை நிகழ்வு; இலங்கை அமைச்சர் கண்டனம் | Indira Gandhi S Assassination Event In Canada

அதோடு பயங்கரவாதத்தை புகழ்வதற்கு நீங்கள் அனுமதித்தீர்கள் என்றால் நீங்கள் இன்னுமொருதலைமுறை இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுவதற்கு நீங்கள்அனுமதிக்கின்றீர்கள் எனவும் இலங்கை அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

Exit mobile version