ஏலியன் வாகனங்களை வைத்திருக்கும் அமெரிக்கா – அம்பலப்படுத்திய முக்கியஸ்தர்
அமெரிக்க அரசாங்கம் ஏலியன் வாகனங்களை வைத்திருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க உளவுத் துறையின் முன்னாள் அதிகாரி டேவிட் க்ரூஷ் இந்த விடயத்தை தெரிவித்ததாக பரபரப்புத் தகவக் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிடம் வேற்று கிரகவாசிகளின் பொருட்கள் இருப்பதாக டேவிட் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்க தேசிய வான் மற்றும் விண்வெளி புலனாய்வு மையத்தில் வேற்று கிரக பொருட்கள் இருப்பதை தற்போதைய அமெரிக்க உளவுத்துறை அதிகாரியான ஜொனாதன் கிரே உறுதிப்படுத்தியுள்ளார்.
கொரோனாவுக்குப் பிறகு பறக்கும் தட்டுகள், ஏலியன்கள் பற்றிய பேச்சு அடிக்கடி அடிபட்ட நிலையில், தற்போது அமெரிக்க அரசிடமே வேற்றுகிரக வாசிகளின் வாகனங்கள் இருப்பதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(Visited 5 times, 1 visits today)