Site icon Tamil News

இந்தியாவால் நட்டஈட்டு தொகை கோரப்பட்டதாக தெரிவிக்கவில்லை – விஜயதாச ராஜபக்ஷ

இந்திய அரசாங்கத்தினால் நட்டஈட்டு தொகை கோரப்பட்டதாக நான் எந்த சந்தர்ப்பத்திலும் சொல்லவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீ அணைத்தல் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்டுக்கொண்டிருந்த அழிவின்போது எமது நாட்டின் கோரிக்கைக்கமைய இந்திய அரசாங்கத்தினால் கடற்படையை தந்துதவிதயதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட செலவை மீண்டும் பெற்றுக்கொள்ள மேற்கொள்ளப்படுகின்ற கோரிக்கை தொடர்பாக நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீ அணைத்தல் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்டுக்கொண்டிருந்த அழிவின்போது அதனை கட்டுப்படுத்துவதற்காக எமது  கோரிக்கைக்கமைய இந்திய கடற்படையின் உதவியை வெற்றிகரமாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தோம்.

அத்துடன் இந்திய அரசாங்கத்தினால் நட்டஈட்டு தொகை ஒன்றை கோரியதாக நான் எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவித்ததில்லை.

என்றாலும் இந்திய அரசாங்கத்தினால் கடற்படையை செலுத்தியதன் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட செலவை மீள் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்திய உயர்ஸ்தானிகரால் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி இரண்டு கடிதங்கள் ஊடாக நீதி அமைச்சர் என்ற வகையில் எனக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் அறிவுறுத்தி இருக்கிறது.

அதன் பிரகாரம் இந்திய கடற்படையை நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு ஈடுபடுத்தியதன் மூலம் ஏற்பட்ட செலவு 400 மில்லியன் இந்திய ரூபா மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு இந்திய கடற்படைக்கு ஏற்பட்ட செலவு 490 மில்லியன் இந்திய ரூபாவையும் அவர்களுக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் எமக்கு அறிவித்திருக்கிறார்கள் எனக் கூறினார்.

Exit mobile version