ஜெர்மனியில் வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஜெர்மனியில் வாகனங்களுக்கான கட்டாய காப்புறுதி அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் வாகனங்களுக்கான கட்டாய காப்புறுதியில் கடந்த ஆண்டு 20 சதவீதமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வாகனங்களின் கூட்டமைப்புக்கு பொறுப்பான அமைப்பான GDV என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 20 சதவீதமான கட்டாய காப்புறுதியானது அதிகரிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு மேலும் 8 சதவீதம் கட்டாய காப்புறுதி அதிகரிக்கப்பட்டதாகவும் அமைப்பானது தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வாகனம் ஒன்றானது விபத்துக்குள்ளாகும் பொழுது சராசரியாக இந்த காப்புறுதி அமைப்பானது 3700 யுரோக்களை பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு வழங்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு சராசரியாக 1000 யுரோக்கள் குறித்த காப்புறுதி அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காப்புறுதி திணைக்களங்களினால் பாதிக்கப்பட்ட அல்லது விபத்துக்குள்ளாகிய வாகனங்களுக்கு கூடுதலான பணம் வழங்குவதற்கு தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது வாகனங்களை திருத்துவதற்குரிய செலவீனமானது அதிகரித்துள்ளதாகவும், வாகனங்களுக்கான உதரிப்பாகங்களுடைய விலையானது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.