Site icon Tamil News

யாழில் இயங்கும் சட்டவிரோத மதுபானசாலைகள் ; கூட்டத்தில் கொதித்தெழுந்த ஆளுநர் P.S.M சாள்ஸ்

யாழ்ப்பாண மாவட்ட மது வரி திணைக்கள அதிகாரி மீது வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ் இன்றைய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சீறிப்பாய்ந்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டபோது,

மதுவரி திணைக்கள உதவி பணிப்பாளரிடம் வடக்கு மாகாண ஆளுநர் சட்டவிரோத மதுபான சாலைகள் தொடர்பில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.நீங்கள் இவ்வாறு சட்ட விரோத மதுபான சாலைகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு வருகின்ற வருமானத்தினை இழக்க செய்கின்றீர்கள்.அத்தோடு அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை.

இந்த கூட்டத்திற்கு கூட திணைக்களத்திற்கு பொறுப்பானவர் இங்கே வருவதில்லை. உதவி அத்தியட்சகர் தான் ஒவ்வொரு முறையும் இந்த கூட்டத்திற்கு வருகின்றார்.எனவே சட்ட விரோத மதுபான சாலைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும். அடுத்த முறை நீங்கள் கூட்டத்திற்கு வரும்போது இவ்வளவு காலத்தில் எத்தனை சட்டவிரோத மதுபான சாலைகளை கட்டுப்படுத்தி இருக்கிறீர்கள் என்ற விவரத்துடன் வரவேண்டும் என கோரி எச்சரித்தார்.

Exit mobile version