ஐஸ்லாந்தில் எரிமலைகள் வெடிப்பு :வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் வீடுகளுக்குச் செல்ல அனுமதி
நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட ஐஸ்லாந்திய நகரத்தில் வசிப்பவர்கள், உடமைகளைச் சேகரிக்க தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த புதன் மற்றும் வியாழன் என இரு தினங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் 1400 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய நாட்களிலும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டில் அவசரநிலையை அறிவித்துள்ளது
வட அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில் 33 சீறும் எரிமலைகள் உள்ளன. எரிமலைகள் வெடிப்பதற்கு முன் அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகும். இந்நிலையில் ஐஸ்லாந்தின் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ச்சியாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
திங்கள்கிழமை 500க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்து தென்மேற்கில் சுமார் 3 கி.மீ. தொலைவில் கிரிண்டாவிக் என்ற கிராமம் உள்ளது. கிரின்டாவிக் நகரத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், . இந்த கிராமத்தில் இருந்து வடக்கு மற்றும் தெற்கு நோக்கி செல்லும் சாலைகள் சேதம் அடைந்ததால் அந்த சாலைகளை அதிகாரிகள் மூடியுள்ளனர்.
நிலநடுக்கம் காரணமாக ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான ப்ளூ லாகூன் நவம்பர் 16-ம் வரை மூடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.