இலங்கை

குருந்தூர் மலைக்கு விஜயம் செய்த புத்தசாசன திணைக்கள உயர் அதிகாரிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலை விவகாரம் ஜனாதிபதி வரை பேசப்பட்டுள்ளது இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (17) குறித்த பகுதிக்கு புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் களவிஜயம் மேற்கொண்டு குறித்த பகுதிகளை பார்வையிட்டுள்ளார்கள்.

புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன ஜனாதிபதி செயலக வடமாகாண இணைப்பாளர் எல்.இளங்கோவன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்,மேலதிக அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்,தொல்பொருள்திணைக்கள உயர் அதிகாரிகள்,வனவளத்திணைக்கள உயர்அதிகாரிகள்,வனஜீவராசிகள் திணைக்கள உயர் அதிகாரிகள்,காணி தொடர்பிலான திணைக்கள உயர் அதிகாரிகள்.கமநலசேவை திணைக்கள உயர் அதிகாரிகள்,விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பயணம் மேற்கொண்டு கள ஆய்வினை மேற்கொண்டுள்ளார்கள்.

கடந்த மாதம் இறுதியில் குருந்தி ரஜமஹா விகாரை அமைந்துள்ள தொல்பொருள் காப்புப் பகுதிக்கு சொந்தமில்லாத காணியில் இருந்து 3 ஏக்கர் காணியை ஒதுக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரண முன்மொழிந்துள்ளார்.

Ancient Kurundi (Kurundumale) in Mullaitivu | AmazingLanka.com

பௌத்த விகாரை மற்றும் இந்து ஆலயம் மற்றும் பொது வசதிகளுக்காகவும் அமைப்பதற்கும் இந்த காணியை ஒதுக்குமாறு, இளைஞர் பாரம்பரியம் மற்றும் நவீன குடிமக்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு முன்மொழிந்துள்ளார்.இதன் பின்னர் செவ்வாய்க்கிழமை (17) களவியயம் மேற்கொண்டு குருந்தூர் மலையினை பார்வையிட்டுள்ளதுடன் குருந்தூர் குளம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளார்.

குருந்தூர் மலைக்காக தொல்பொருள் திணைக்களம் தமிழ்மக்களின் பூர்வீக காணிகளை எல்லைப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் பல்வேறு தடவைகள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள் மலையினை அண்டிய தமிழ்மக்களின் பூர்வீக காணிகளில் எதுவும் செய்யமுடியாத நிலை காணப்படுவதாகவும் தொல்பொருள் திணைக்களமும் வனவளத்திணைக்களமும் தங்கள் காணிகளை எல்லைப்படுத்தியுள்ளன.இந் நிலையில் மீள்குடியேற்றத்திற்கு பின்னர் குறிப்பாக 2012 ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் விவசாய செய்கையினையோ மீள்குடியேற்றத்தினையோ செய்யமுடியாத நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content