இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு : மக்களுக்கு எச்சரிக்கை!
இங்கிலாந்தின் சில பகுதிகளில் இன்று 5cm வரை பனிப்பொழிவு காணப்படலாம் எனவும் சில பகுதிகளில் வெப்பநிலை -10C (14F) வரை குறையும் எனவும் met office தெரிவித்துள்ளது.
மூன்று மஞ்சள் வானிலை எச்சரிக்கைகள் தற்போது நடைமுறையில் உள்ளன, வானிலை அலுவலக முன்னறிவிப்பாளர்கள் வார இறுதியில் குளிர் நிலைகள் நீடிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.
ஸ்காட்லாந்தில் இருந்து கிழக்கு ஆங்கிலியா வரையிலான இங்கிலாந்தின் முழு கிழக்குக் கடற்கரையும் இன்று காலை 11 மணி வரை பனி பொழிவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சாலை மற்றும் இரயில் பயணங்கள் வழக்கத்தை விட அதிக நேரம் எடுக்கலாம் என்றும், அப்புறப்படுத்தப்படாத பனிக்கட்டிகள் வழுக்கி விழுவதற்கும் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு அயர்லாந்து மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் காலை 10 மணி வரை பனிக்கான எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன, மழையைத் தொடர்ந்து வெப்பநிலை உறைபனிக்குக் கீழே வீழ்ச்சியடைவதால் மோசமான நிலமை உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.