வாழ்வியல்

ஆண்கள் மாத்திரம் அறிந்துக் கொள்ள வேண்டிய ஆரோக்கியக் குறிப்புகள்

சோம்பேறித்தனமாக இருக்கும் ஆண்களை எவரும் விரும்ப மாட்டார்கள். பெண்களாவது சற்று அப்படி, இப்படி மெதுவானவர்களாக இருந்தால் மிகவும் சாது, மென்மையானவர்கள் என்று சொல்லிவிடுவர்.

ஆனால், ஆண்கள் கண்டிப்பாக ஒவ்வொரு செயலிலும் சுறுசுறுப்புடையவர்களாக இருத்தல் வேண்டும். அதுவே அடுத்தவரின் கவனத்தை ஈர்க்கும் அழகாகும்.

Men's Health Tips : Men, want to maintain stamina even in old age? Then  follow these 9

காலை, மாலை இரு வேளைகளிலும் கண்டிப்பாக குறைந்தது ஒரு மணி நேரமாவது ‘நடக்கும் பயிற்சியை’ மேற்கொள்ள வேண்டும். எந்தவித உபகரணங்களும், பயிற்சி முறையும் இல்லாமல் எளிதில் மேற்கொள்ளும் உடற்பயிற்சி ‘நடை’ ஆகும். அதனால் கண்டிப்பாக நம் உடலுக்கு நன்மை உண்டு. இளமைப் பருவம் முடியும் தறுவாயில் பலருக்கு ஏற்படும் ‘தொப்பை’ விழுதலை இந்தச் சீரான நடைப்பயிற்சி கட்டாயம் தவிர்த்து விடும்.

The Ultimate Gym Routine for Men in 2021 | Genesys Men's Health

வெற்றிலைப் பாக்கு போடுதல், புகைப்பிடித்தல் போன்ற பழக்க வழக்கங்கள், நம் உடலுக்கு நோயைத் தருவன மட்டுமல்ல, நம் புற அழகைக் கெடுக்கக்கூடியவைகளும் ஆகும். அவற்றைத் தவிர்த்தாலே, நம் உடல் பெரும்பாலான உபத்திரவங்களிலிருந்து விடுதலை பெறும். மன நிம்மதியைத் தரும். மன நிம்மதி வந்தால் முகத்தில் தானாக ஒரு களை வரும்.

8 Health tips For Men- Food, Fitness & More | Nature Made®

‘சனி நீராடு’ – என்பது ஓர் பயனுடைய பழமொழி. வாரத்தில் ஒருநாள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தால், அது உடம்பின் உஷ்ணத்தைத் தவிர்த்து, உடலை நல்ல நிலையில் வைத்திருக்க உதவும்.

ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள். ஆண்கள் அவரவர் தம் உடல்வாகிற்கு ஏற்ற உடைகளை உடுத்துதல் வேண்டும். தம் நிறத்திற்கு ஏற்றவாறு உடை வண்ணங்களை தேர்வு செய்து அணிந்தாலே, ஆண்களுக்கு ஒரு ‘லுக்’ வரும். ட்ரெஸ் சென்ஸ் – அவசியம்.

உள்ளாடைகளை அணியும்போது, மிகவும் டைட்டாக இல்லாமல் அணிதல் மிகவும் அவசியம். உள்ளாடைகளை ஒழுங்கான முறையில் பராமரித்து அணிதல் அவசியம். இல்லையெனில் பலவித பாக்டீரியல் இன்ஃபெக்ஷன்ஸ் ஏற்பட்டு அவதியுற நேரிடும்.

நிமிர்ந்த பார்வையும் நேர்கொண்ட நடையும் ஆண்களுக்கு அழகைக் கூட்டித் தருவேன். ஹயூமர் சென்ஸ் உள்ள ஆண்கள் எல்லோராலும் விரும்பப் படுவார்கள்.

Healthy eating tips for men of all age groups | The Times of India

ஆண்களுக்கு மற்றொரு முக்கியமான பிரச்னை வழுக்கை விழுதல் ஓரளவு அதிகமான முடி உதிரத் தொடங்குவதாக நாம் அறிந்த உடனேயே அதனைத் தவிர்க்க நாம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அடுக்குச் செம்பருத்திப் பூ மற்றும் அவற்றின் இலைகளை கசக்கிச் சாறெடுத்துத் தலையில் தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம். சத்துள்ள கீரை வகைகள், கறிவேப்பிலை, பால், முட்டை இவைகளை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆண்கள் உணவில் அதிக அளவு தக்காளி சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கலாம். இதனால் சிறுநீரகத்தில் ‘கல்’-ஏற்பட்டு அவதியுறுவது தவிர்க்கப்படும்.

தவறான சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் ஒழுங்கான எண்ணத்துடன் வாழ்ந்தாலே உடலில் எந்த நோய் நொடியும் அணுகாமல் ஆரோக்கியத்துடனும், அழகுடனும் வாழலாம்.

(Visited 15 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content