Site icon Tamil News

நான்கு மாகாணங்களின் ஆளுநர்களுக்கு பதவி விலகுமாறு அறிவிப்பு

சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவர் பதவி விலகும் போது ஆளுநர்கள் ராஜினாமா செய்வது வழக்கம் என்று குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் போது அமைச்சரவையை நீக்குவதற்கு சமம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும்இ கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று பல மாதங்கள் கடந்துள்ள போதிலும்இ அந்த ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்யவில்லை.

இந்த ஆளுநர்கள் பதவி விலகியதன் பின்னர் புதிய ஆளுநர்களை நியமிப்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்படும்.

சில ஆளுநர்களை நீக்குமாறு அந்த மாகாணங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version