தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா, தேர்தலில் போட்டியிட தடை விதித்த முந்தைய முடிவை ரத்து செய்து, அந்நாட்டின் பொதுத் தேர்தலில் போட்டியிடலாம் என்று தென்னாப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேர்தல் நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஜுமா uMkhonto weSizwe Party (MK) சார்பாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட வழிவகை செய்கிறது
ஜுமாவின் வேட்புமனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது குற்றப் பின்னணி காரணமாக அவர் பதவிக்கு போட்டியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் முன்னதாக தீர்ப்பளித்தது.
“தேர்தல் ஆணையத்தின் முடிவு ரத்து செய்யப்படுகிறது” என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தற்போது தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் 1994 இல் ஜனநாயகத்தின் வருகைக்குப் பின்னர் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த வாக்குகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தல் மே 29 அன்று நடைபெற உள்ளது.