வடக்கு மாகாணத்தில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கண் பரிசோதனை
எதிர்வரும் தை மாதம் வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கண் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்படும் என கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் அண்மையில் நாங்கள் இலங்கை வரலாற்றில் இரண்டாவது தடவையாக கண்ணியல் பிரிவு போதனை வைத்தியசாலையில் கூடுதலான வெண்பிறை சத்துரை சிகிச்சைகள் குறுகிய காலத்துக்குள் செய்திருக்கின்றோம்.
நாங்கள் தான் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தேசிய வெசாக்கை முன்னிட்டு கோவிட் காலத்திலும் 1200 கற்றாக் 10 நாட்களில் செய்த செய்துள்ளோம்.
இந்த முறை உலக சர்வதேச பார்வவை தினத்தை முன்னிட்டு சினேகபூர்வ வாரமான போதனை வைத்தியசாலை இரத்திரபுர, யாழ்ப்பாணம் அந்த வாரத்தையும் முன்னிட்டு ஐந்து நாட்களில் அதாவது அக்டோபர் 30ம் திகதியில் இருந்து நவம்பர் மூன்றாம் திகதி வரை 1050 பேருக்கு செய்திருக்கின்றோம்.
இது முற்று முழுதாக ஆனந்தா அழகா பவுண்டேஷன், மலேசிய தொண்டு நிறுவனத்தின் மூலதனத்தோடு அசிஸ்ராரார் பிரித்தானியா இலங்கை தளமாக இயங்கும் மற்றுமொரு சர்வதேச தோண்டு நிறுவனம் இவ்வாறான திட்டங்களை ஒருங்கிணைத்து முற்றிலும் இலவசமாக அதாவது ஒரு மாத காலத்துக்கான மருந்துகளும் இலவசமாக வழங்கி தரமான முறையில் இந்த சிகிச்சைகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.
அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களை அண்டிய விவசாயபுர கிராமங்களில் இருந்து 150 பேரும், வவுனியா மாவட்டத்தில் 350 பேரும், மன்னார் மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் இருந்து தலா 100 பேரும், யாழ் மாவட்டத்தில் 350பேருக்கும் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உங்களுக்கு தெரியும் வடமாகணத்தை பொறுத்தவரையில் ஆளணி மிகவும் குறைவாக இருக்கின்றது, குறைந்த ஆளணி வளத்துடன் எங்களுக்கு இருக்கும் இடர்பாடுகளை சரியான முறையில் திட்டமிட்டு பல்வேறு தரப்பினரின் உதவியுடன் இதனை நாங்கள் நிறைவாக செய்திருக்கின்றோம்.
எங்களுடைய இந்த செயற்பாட்டுக்கு இரத்தினபுர வைத்தியசாலையின் கண் வைத்திய குலாம், கொத்தலாவல பல்கலைக்கழக வைத்திய குலாம், வவுனியா வைத்தியசாலையின் கண் வைத்திய பிரிவு கண் வைத்திய நிபுணர்கள் உதவியுடன் இந்த கண் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு இருக்கின்றது.
உங்களுக்கு தெரியும் இலங்கையை பொறுத்தவரையில் பார்வையில்லாமல் இருப்பவர்களில் 70 விதமானவருக்கு இருக்கின்ற பிரச்சினை வெண்புறை இதனை சாதாரணமாக வருடத்திற்கு நாங்கள் பூவா 3000 தொடக்கம் 5000 வரை சாதாரணமாக செய்து கொண்டு வந்துள்ளோம். இந்த கோவிட் காலம் அத்தோடு பொருளாதாரம் நெருக்கடி உள்ளிட்ட வேறுபட்ட காரணங்களினால் இலவசமாக செய்வது இல்லாமல் போய்விட்டது.
நாங்கள் நிலையான அபிவிருத்தி அடைய வேண்டுமென்றால் இந்த கண் சுகாதாரம் கண்பார்வை சிறப்பாக இருக்க வேண்டும் இது ஐக்கிய நாடுகள் சபையிலேயே 2021 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு அந்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது, காலநிலை மாற்றமும் கண்ணும் என்கின்ற ஒரு கருத்து பொருள், மற்றது இந்த நிலையான அபிவிருத்தி திட்டம்.
இந்த வருடம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல் இந்த வருடத்தில் இருந்து இன்னும் மூன்று வருடங்கள் இலவசமாக 10 ஆயிரத்துக்கு மேல் செய்வதற்கு யோசனை செய்து இருக்கின்றோம்.
இந்த நடைமுறையின் மூலம் வடமாகணத்தில் இருக்கும் சகல மாவட்டங்களும் அந்தந்த கிராமிய வைத்தியசாலைகள் ஊடாக இதற்கான நபர்களை தெரிவு செய்கின்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது, இதனால் மக்கள் பயப்படத் தேவையில்லை கால அவகாசமா அவகாசம் ஒரு வருடத்துக்குள் இதற்காக காத்திருப்பவர்கள் அனைவரையும் இல்லாது பண்ணி இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ள கூடியதாக இருக்கும்.
அதே நேரம் உங்களுக்கு ஒன்றை கூற வேண்டும் கண்பார்வை குறைவு (கண்ணாடி அணிதல் ) காரணத்திற்காக ஆனந்தா பவுண்டேஷன் அவர்கள் மூலதனத்தை இங்கு செலவிடுவதற்கு விரும்பி இருக்கின்றார்கள். தை மாதம் இதற்கான நிகழ்ச்சி திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் இதன் மூலம் வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக முதலாம் தரத்தில் இருந்து 12-ம் தரம் வரையான மாணவர்களுக்கு கண் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்படும்.
ஆகவே நாங்கள் இந்த மூன்றாவது நிகழ்சித் திட்டமாக மந்த பார்வை அல்லது பார்வை இல்லாதவர்களுக்கான சிறப்பு பயிற்சிகள் மற்றும் உபகரணங்கள் வழங்குதல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.