எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் சேதம் : 6 பில்லியன் வழங்குமாறு கோரிக்கை!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குமாறு கோரி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீயினால் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு துறைகளுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்களிடம் இருந்து 06 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் நட்டஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வன அரன அறக்கட்டளை உள்ளிட்ட 04 தரப்பினர் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உள்ளூர் பிரதிநிதி நிறுவனமான C Consortium Lanka நிறுவனம் உட்பட 8 நிறுவனங்கள், கப்பலின் உரிமையாளர்கள், காப்புறுதியாளர்கள் மற்றும் நடத்துநர்கள் இதன் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)