எலோன் மஸ்க்குக்கு 24 மணிநேர இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பில் தவறான தகவல்களைக் கையாள்வதற்கு உயர்மட்ட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியொருவர் எலோன் மஸ்க்குக்கு 24 மணிநேர இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றிய தவறான தகவல் வழங்குவது ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தை மீறுவதாகும். என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எக்ஸ் சமூக ஊடக தளமான இஸ்ரேல்-ஹமாஸ் போரைப் பற்றிய வன்முறை பேச்சு மற்றும் வெறுக்கத்தக்க நடத்தை ஆகியவற்றைப் பகிரும் இடுகைகள் தொடர்பில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
X இல் இருக்கும் போலியான மற்றும் கையாளப்பட்ட படங்களில் “தொடர்பற்ற ஆயுத மோதல்களின் பழைய படங்கள் அல்லது உண்மையில் வீடியோ கேம்களில் இருந்து உருவான இராணுவ காட்சிகள் ஆகியவை அடங்கும்” என்று ஐரோப்பிய ஆணையர் தியரி பிரெட்டன் மஸ்க்கிற்கு செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.