இந்தியாவில் புதிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரம் – இன்று நடத்தப்படும் கூட்டம்
இந்தியாவில் பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான புதிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது.
அண்மைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஆளும் கூட்டணி உறுப்பினர்கள் நரேந்திர மோடியைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பர்.
பிறகு கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார் ஆகியோருடன் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்முவைச் சந்திப்பர்.
மோடிக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்களின் பட்டியலை அவர்கள் அதிபரிடம் சமர்ப்பிப்பர் என்று கூட்டணி உறுப்பினர்கள் சிலர் கூறினர்.
மோடி தொடர்ந்து மூன்றாவது முறை இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்க அது வழியமைக்கும். நாளை மறுநாள் பதவியேற்பு நிகழ்வு இடம்பெறலாம் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.