பூமியை சுற்றியுள்ள மின்சார புலம் : 60 ஆண்டுகளுக்கு பின் கண்டறியப்பட்ட மர்மம்!
60 ஆண்டுகளில் முதன்முறையாக, நாசா பூமியின் மறைக்கப்பட்ட மின்சார புலத்தை கண்டறிந்துள்ளது.
இது “துருவ காற்றை” இயக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது சார்ஜ் செய்யப்பட்ட துகள்களை சூப்பர்சோனிக் வேகத்தில் விண்வெளிக்கு அனுப்புவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், இது சம்பந்தமான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மின்சார புலனானது முன்னதாக 60 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இவ்வாறான புலம் வெளிப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ராக்கெட்டின் அளவீடுகளைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் அம்பிபோலார் (ambipolar ) புலத்தின் வலிமையைக் கணக்கிட்டுள்ளனர்.
இது மேல் வளிமண்டலத்தின் ஒரு அடுக்கான அயனோஸ்பியரை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய புரிதலை வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பலவீனமாக இருந்தாலும், துகள்களின் ஓட்டத்தை விண்வெளியில் செலுத்துவதில் மின்சார புலம் முக்கிய பங்கு வகிக்கிறது.
பூமியின் வளிமண்டலத்தில் இருந்து வெளிப்புறமாகப் பயணிக்கும் இந்தத் துகள்களில் பல “குளிர்ச்சியாக இருந்ததாகவும், சுப்பர் சோனிக் வேகத்தில் பயணிப்பதாகவும் ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.