அமெரிக்க ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் டொனால்ட் ட்ரம்ப் : பைடன் விமர்சனம்!
டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது கூட்டாளிகள் அமெரிக்க ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி நாட்டின் முக்கிய மதிப்புகளை நிலைநிறுத்துவதை விட தனிப்பட்ட அதிகாரத்தில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், இதற்கு குடியரசுக் கட்சியினர் கூட உடந்தையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரிசோனாவில் தனது நண்பரும் கடுமையான டிரம்ப் விமர்சகருமான மறைந்த குடியரசுக் கட்சியின் செனட் ஜான் மெக்கெய்னைக் கௌரவிக்கும் வகையில் கட்டப்படவுள்ள நூலகத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும், ஜனநாயகங்கள் துப்பாக்கியின் முடிவில் இறக்க வேண்டியதில்லை, என்றும் பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) தேர்தல் ஆண்டாக உள்ளது. தற்போதைய நிலைவரப்படி மீண்டும் தேர்தலில் வெற்றிப்பெறும் வாய்ப்பு ட்ரம்பிற்கு இருப்பதாக கூறப்படுகிறது.