Tamil News

AHRC நிறுவனத்தின் ஜனநாயக பங்குதார்ர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு

ஜனநாயக பங்குதாரர்களுடனான கலந்துரையாடலும், மக்கள் குறைகேள் களம் ஒன்றினை இன்று (13.08.2023) ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச சபை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

AHRC நிறுவனம் ஜனநாயக பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டத்தின் கீழ் பிரதேச சபைகள், சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை 45 நாட்களுக்கு ஒருமுறை ஒன்றிணைப்பதன் ஊடாக சமுகத்தில் இனம்காணப்படும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி தீர்வுகளை முன்மொழிந்தும் மற்றும் பிரதேச சபையின் செயற்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்தி வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கூறலை ஏற்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் அடிப்படையில் இன்று ஏறாவூர் பற்று பிரதேச சபை உத்தியோஸ்தர்கள் தலைமையில் பிரதேச சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் என 45 பேர் கலந்து கொண்டிருந்தனர் மற்றும் இக்கலந்துரையாடலின் போது மக்கள் எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகள் முன்மொழியப்பட்டிருந்தன.

குறிப்பாக பிரதேசத்தில் யானை தாக்கம், வீதி புனரமைப்பு, அரச செயற்பாடுகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் மக்கள் குறிப்பிட்டதுடன் மற்றும் தொழில் இன்மை பற்றிய பிரச்சனைகளையும் சிவில் அமைப்புக்கள் முன்மொழிந்திருந்தனர்.

இதற்காக பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ளும் செயற்பாட்டுகளை பிரதேச சபை சார்பாக குறிப்பிட்டு இருந்தனர் AHRC நிறுவனத்தின் பிரதி இணைப்பாளர் திருA. மதன், திட்ட இணைப்பாளர் T. தனுஸ்குமார் மற்றும் கள உத்தியோஸ்தர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version