இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் செய்யும் காரியம்:: துரித நடவடிக்கை எடுக்க அமைச்சர் அழைப்பு
சுற்றுலா விசாவில் இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளூர் வர்த்தகர்களுக்கு பாரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாகக் கூறி அதனைத் தடுக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பொது பாதுகாப்பு அமைச்சரிடம் இன்று வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுலா விசாவில் வந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் குறிப்பாக தென் மாகாணத்தில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“இது குறிப்பாக தென் மாகாணத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உள்ளூர் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் விரைவில் கவனிக்கப்பட வேண்டும். என்றார்.
சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் உரிய முறையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்தார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுகளுக்குப் பொறுப்பான பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், இது தொடர்பில் ஆராய்ந்து, இது தொடர்பில் முடிவெடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.