பிரபல யூட்யூபர் TTF வாசனின் சேனலை முடக்க நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்கி விபத்து ஏற்படுத்தப்பட்ட வழக்கில் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில், நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் தினமும் காவல் நிலையத்தில், வாசன் கையெழுத்து போட்டு வருகிறார்.
முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் டிடிஎப் வாசன் வழக்கில், அவரது youtube சேனலை ஏன் முடக்கக்கூடாது என கேள்வி எழுப்பியிருந்தது.
இந்தநிலையில் காவல்துறையினரும் அவரது youtube சேனலை பார்த்து பல இளைஞர்கள், கெட்டுப் போவதாகவும் அவரது youtube சேனலை முடக்க நீதிமன்றம் உத்தரவிட கோரிக்கை வைத்திருந்தனர்.
காவல்துறையினர் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் தற்பொழுது அவரது சேனலை முடக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
(Visited 2 times, 1 visits today)