ஆஸ்திரேலியாவில் கார்களில் ஏற்பட்டுள்ள ஆபத்து – மீளக்கோரிய நிறுவனம்
ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட 13,000க்கும் மேற்பட்ட ஹூண்டாய் கார்கள் இன்ஜின் கோளாறு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இந்த குறைபாட்டால் வாகனம் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் ரக கார்களின் 02 மாடல்களுக்கு சொந்தமான கார்கள் மீள அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Veloster (FS) மற்றும் Tucson (TL) (மாறுபாடுகள்: FS 1.6GDI, TL 2.0MI) (2014 – 2017)
பாதிக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தும் எவரும் இலவச நிபந்தனை சோதனைக்கு தங்கள் விற்பனை பிரதிநிதியை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(Visited 15 times, 1 visits today)