வட அமெரிக்கா

குப்பை தொட்டியில் மீட்கப்பட்ட உடல் பாகங்கள்.. அடையாளம் கண்ட பொலிஸார்

கனடாவின் டொரன்டோ நகரின் ரோஸ்டீல் பகுதியில் குப்பைத் தொட்டி ஒன்றில் ஓராண்டுக்கு முன்னர் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த உடல் பாகங்கள் யாருடையது என்பது குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.இந்த உடல் பாகங்களானது காணாமல் போன நான்கு வயதான நிவேயா டக்கர் என்ற சிறுமியுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ரொரன்டோவில் வாழ்ந்து வரும் சிறுமியின் தாய்க்கு பொலிஸார் தகவல் அனுப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இந்த சிறுமி எவ்வாறு கொல்லப்பட்டார் உடல் எவ்வாறு குப்பை தொட்டிக்குள் வீசப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கட்டுமான பணி மேற்கொள்ளப்படும் ஓரிடத்தில் குப்பை தொட்டியில் இந்த உடல் பாகங்கள் கடந்த ஆண்டு மே மாதம் 2ம் திகதி மீட்கப்பட்டது.

சிறுமி எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.மரபணு பரிசோதனைகள் மூலம் உடல் பாகங்கள் யாருடையது என்பது பற்றிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த உடல் பாகங்கள் நான்கு வயது சிறுமியுடையது என தெரியவந்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content