வட அமெரிக்கா

புதிய வரிகள் 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் – சீனாவை கைவிட்ட டிரம்ப்

  • April 10, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை உட்பட பல நாடுகள் மீது விதிக்கவுள்ளதாக அறிவித்திருந்த புதிய வரிகளை 90 நாட்களிற்கு இடைநிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார். எனினும் 10 வீத வரி தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும். இருப்பினும், சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா விதித்த 104 சதவீத வரி 125 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இறக்குமதிகள் மீது 84 சதவீத வரி விதிக்கப்படும் என்று சீன நிதி அமைச்சகம் முன்பு அறிவித்தது. அதன்படி, சீனாவின் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா வரி […]

விளையாட்டு

ஆணவம் இருக்கக்கூடாது என கூறும் விராட் கோலி

  • April 10, 2025
  • 0 Comments

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கூறும்போது, “பேட்டிங்கில் ஆணவம் இருக்கக் கூடாது. யாரையும் நாம் அதிகமாக மறைக்க செய்யவும் முயற்சிக்கக் கூடாது. எப்போதும் போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து விளையாட வேண்டும். நான் சூழ்நிலைக்கு தகுந்தவாறுதான் விளையாடுவேன். இந்த விஷயத்தில் நானே என்னைப் பெருமையாக நினைப்பேன். நான் பேட்டிங்கில் நல்ல ரிதமில் இருந்தால் ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்வேன். வேறு யாராவது நல்ல ரிதமில் விளையாடினால் அவர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு […]

இலங்கை

இலங்கையில் இன்றும் உச்சம் கொடுக்கும் சூரியன்! பல பகுதிகளுக்கு மழை

  • April 10, 2025
  • 0 Comments

இலங்கையில் இலங்கைளில் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் பல இடங்களில் மழை அல்லது […]

ஐரோப்பா

பிரித்தானியா செல்ல முயற்சித்து நடு கடலில் தத்தளித்த 72 அகதிகள்

  • April 10, 2025
  • 0 Comments

பிரான்ஸின் பா-து-கலே கடற்பிராந்திய மூடாக பிரித்தானியா செல்லப்பட்ட படகு ஒன்று நடுக்கடலில் பழுதடைந்து அகதிகள் தத்தளித்துள்னர். செவ்வாய்க்கிழமை மாலை பா-து-கலேயின் Saint-Etienne-au-Mont நகர்பகுதி வழியாக 72 அகதிகள் ஏற்றிக்கொண்டு படகு ஒன்று பயணித்துள்ளது. நடுக்கடலில் இயந்திரக்கோளாறு காரணமாக படகு பழுதடைந்து நின்றது. உடனடியாக கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத கடற்பயணங்களை கண்காணிக்கும் சிறப்பு படையினரான அமைப்பினரால் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். Wimereux (Pas-de-Calais) நகரம் வழியாக இரு படகுகளில் பயணித்த 115 ஆ மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

கால அவகாசம் வழங்கி எச்சரிக்கை விடுத்த அர்ச்சுனா இராமநாதன்

  • April 10, 2025
  • 0 Comments

தனக்கு எதிராக பழிபோடும் காணொளிகள் நீக்குவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கால அவகாசம் வழங்கியுள்ளார். பகிரங்க வெளியில் மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு நாள் அவகாசம் தருவதாக அர்ச்சுனா எம்.பி குறிப்பிட்டுள்ளார். அந்தப் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “என் மீது பழி போடுவதற்காக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் உங்கள் வீடியோக்கள் ஸ்டேட்மென்ட்களை அழிப்பதற்கும் தனிப்பட்ட ரீதியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக எனது பாராளுமன்றத்தில் உள்ளே நடக்கும் சம்பவங்களை பகிர்ந்து மான நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் தெரிந்தோ தெரியாமலே […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

மருந்து ஏற்றுமதிப் பொருள்கள் மீது பெரிய அளவில் வரிவிதிக்க தயாராகும் டிரம்ப்

  • April 10, 2025
  • 0 Comments

நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் மருந்து ஏற்றுமதிப் பொருள்கள் மீது பெரிய அளவில் வரிவிதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அப்படிச் செய்வதால் மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவுக்குச் செயல்பாடுகளை மாற்றும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மருந்து நிறுவனங்களுக்குத் தனி வரித்திட்டம் உள்ளது. வரித்திட்டத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஐரோப்பாவின் மருந்து நிறுவனங்கள் அச்சம் தெரிவித்தன. புதிய வரிகளால் மருந்து நிறுவனங்கள் இனி ஐரோப்பாவைத் தவிர்த்து, அமெரிக்காவில் முதலீடு செய்ய நேரிடும் என்று ஐரோப்பிய ஆணையத்துடன் நடத்தப்பட்ட சந்திப்பில் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் கோழி இறைச்சி, முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு?

  • April 10, 2025
  • 0 Comments

இலங்கையில் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். பண்டிகைக் காலத்தில் இந்த பொருட்களுக்கு அதிக கேள்வி எழுவதே இதற்குக் காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். முட்டை ஒன்றின் சில்லறை விலை 39 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கோழி இறைச்சி ஒரு கிலோ 1,100 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, பேலியகொடை […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

வத்திக்கானில் போப் பிரான்சிஸை சந்தித்த மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா

  • April 9, 2025
  • 0 Comments

மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் வத்திக்கானில் போப் பிரான்சிஸை தனிப்பட்ட முறையில் சந்தித்தனர், அங்கு அவர் அவர்களின் 20வது திருமண ஆண்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தார். பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், “போப் அவர்களை வரவேற்க போதுமான அளவு நலமாக இருந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர்களின் வாழ்த்துக்களை நேரில் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும்” மன்னரும் ராணியும் தெரிவித்தனர். இத்தாலிக்கு அரசு முறைப் பயணத்தில்,ரோமில் ஒரு அரசு விருந்துக்கு முன்னதாகவும் இந்தச் […]

ஐரோப்பா செய்தி

டொமினிகன் இரவு விடுதி விபத்தில் உயிரிழந்த முன்னாள் MLB வீரர்கள்

  • April 9, 2025
  • 0 Comments

டொமினிகன் குடியரசில் திங்கட்கிழமை இரவு ஒரு இரவு விடுதியில் நடந்த ஒரு பெரிய விபத்து நிகழ்வில் ஏற்பட்ட காயங்களால் முன்னாள் முக்கிய லீக் வீரர்களான ஆக்டேவியோ டோட்டல் மற்றும் டோனி பிளாங்கோ ஆகியோர் உயிரிழந்தனர். சாண்டோ டொமிங்கோவில் உள்ள பிரபலமான இரவு நேர இடமான ஜெட் செட்டில் கூரை இடிந்து விழுந்ததில் மீட்புக் குழுவினர் அவரையும் குறைந்தது ஏழு பேரையும் கண்டுபிடித்தபோது டோட்டல் உயிருடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள், கடுமையான காயங்களுக்கு சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

ரஷ்யாவுக்காக 155 சீனர்கள் போராடுவதாக ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

  • April 9, 2025
  • 0 Comments

உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய இராணுவத்திற்காகப் போராடும் 155 சீன நாட்டவர்கள் பற்றிய தகவல்களை உக்ரைன் உளவுத்துறை கொண்டுள்ளது என்றும், உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்றும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா சமூக ஊடகங்கள் மூலம் சீன குடிமக்களை ஆட்சேர்ப்பு செய்து வருவதாகவும், சீன அதிகாரிகள் இந்த முயற்சிகளை அறிந்திருப்பதாகவும் கீவ் நகரில் செய்தியாளர்களிடம் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். பெய்ஜிங்கிலிருந்து ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு அறிவுறுத்தல்கள் கிடைக்கிறதா என்பதை உக்ரைன் மதிப்பிட முயற்சிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். […]