ட்ரோன்களை சுட்டு வீழ்த்தக்கூடிய முதல் லேசர் அடிப்படையிலான ஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்திய இந்திய விஞ்ஞானிகள்
எதிரிகளின் ஆளில்லா வானூர்திகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, ஆயுதத்தைப் பரிசோதிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இதற்காக லேசர் அடிப்படையிலான ஆயுத அமைப்பு பயன்படுத்தப்பட்டதாகவும், சோதனையின்போது பல டிரோன்களையும் எதிரிகளின் கண்காணிப்பு உணர்திறன் கொண்ட கருவிகளையும் இந்தப் புதிய ஆயுதம் வெற்றிகரமாகத் தாக்கி அழித்ததாக இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்தியாவின் தற்காப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation) டிரோன்களை அழிக்கும் புதிய ஆயுதத்தை வடிவமைத்து சோதித்துப் […]