இந்தியா

இந்தியா – பச்சிளம் குழந்தை கடத்தல் விவகாரத்தில் மருத்துவமனை உரிமத்தை ரத்துசெய்த உச்சநீதிமன்றம்

  • April 16, 2025
  • 0 Comments

பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் மருத்துவமனையின் உரிமத்தை உடனடியாக ரத்துசெய்யக்கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ரூ.4 லட்சத்திற்கு கடத்தப்பட்ட குழந்தை விற்கப்பட்டது.இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. குழந்தை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் முன்கூட்டியே பிணை வழங்கிய நிலையில், அதை உச்சநீதிமன்றம் ரத்துசெய்தது.மேலும், அதிகாரிகளின் கருணையற்ற அணுகுமுறையையும் கண்டித்தது. குழந்தை கடத்தல் வழக்கை மோசமாகக் கையாண்டதாகக் […]

ஆசியா

அமெரிக்காவிற்கு சிறிய பார்சல்களை அனுப்புவதை நிறுத்தும் சீனா!

  • April 16, 2025
  • 0 Comments

தெற்கு சீன நகரத்திலிருந்து வரும் சிறிய மதிப்புள்ள பார்சல்களுக்கு வரி விதிக்க வாஷிங்டன் திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததை அடுத்து, ஹாங்காங்கின் தபால் அலுவலகம் அமெரிக்காவிற்கு சிறிய பார்சல்களை அனுப்புவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஹாங்காங்கிலிருந்து வரும் சிறிய மதிப்புள்ள பார்சல்களை வரி இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கும் சுங்க விதிவிலக்கை முடிவுக்குக் கொண்டுவருவதாக அமெரிக்க அரசாங்கம் முன்னதாக அறிவித்தது. மே 2 முதல் அவற்றின் மீது 120% வரி விதிக்கப்பட்டது. “டி மினிமிஸ்” விலக்கு தற்போது $800 க்கும் குறைவான […]

ஆப்பிரிக்கா

துனிசியாவில் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழப்பு : மக்கள் போராட்டம்!

மத்திய நகரமான Mazzouna இல் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து திங்களன்று மூன்று மாணவர்கள் இறந்ததை அடுத்து, நூற்றுக்கணக்கான துனிசியர்கள், பொறுப்புக்கூறலைக் கோரி செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாழடைந்த சுவர் இடிந்து விழுந்ததில், இளங்கலைப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த மூன்று பதின்பருவ மாணவர்கள் உயிரிழந்தனர், மேலும் இருவர் படுகாயமடைந்ததாக சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொறுத்தவரை, சோகம் துனிசியாவில் பொதுச் சேவையின் சீரழிவை பிரதிபலிக்கிறது மற்றும் மோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு மத்தியில், […]

பொழுதுபோக்கு

“பிக் பாஸ்”க்கு என்ட்டு கார்ட் போட்டாச்சா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • April 16, 2025
  • 0 Comments

பிக் பாஸ் ஷோ இந்தியாவில் எந்த அளவுக்கு பிரபலம் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. இதில் போட்டியாளர்களாக பங்கேற்கும் நபர்கள் பெரிய அளவில் பிரபலம் ஆகி புகழின் உச்சிக்கே செல்கிறார்கள். ஹிந்தியில் கடந்த 20 வருடங்களாக பிக் பாஸ் ஷோ நடைபெற்று வருகிறது. அதை சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் ஷோ நடப்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. ஷோவை நடத்தும் தயாரிப்பு நிறுவனமான Banijay Asia (Endemol Shine) […]

பொழுதுபோக்கு

இளையராஜாவுக்கு பதிலடி கொடுத்த “குட் பேட் அக்லி”

  • April 16, 2025
  • 0 Comments

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குட் பேட் அக்லி படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வெளியான சில நாட்களிலேயே 100 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது. சமீபகாலமாக வெளியாகும் படங்களில் பழைய பாடல்களை வைத்து வருகிறார்கள். அவ்வாறு தான் குட் பேட் அக்லி படத்தில் என் ஜோடி மஞ்ச குருவி, ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ போன்ற பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இந்த பாடல்கள் எல்லாமே இளையராஜா இசையமைத்த […]

உலகம்

மெனோர்கா தீவில் 03 வாகனங்கள் மோதி கோர விபத்து!

  • April 16, 2025
  • 0 Comments

மெனோர்கா தீவில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபதுக்குள்ளனத்தில் 03 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில் ஸ்பெயின் சுற்றுலா பயணி ஒருவர் தலைநகரை நோக்கிச் செல்லும்போது மீ-1 சாலையின் தவறான பக்கத்தில் திரும்பியதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

இலங்கை: புத்தாண்டு எண்ணெய் அபிஷேக விழாவில் பிரதமர் ஹரிணி பங்கேற்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டிற்கான எண்ணெய் அபிஷேக விழா இன்று (ஏப்ரல் 16) கொலன்னாவையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராஜமகா விஹாரையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நடைபெற்றது. பிரித் ஓதப்பட்டதைத் தொடர்ந்து, காலை 9:04 மணிக்கு சுப நேரத்தில் எண்ணெய் அபிஷேக சடங்கு, கோயிலின் பிரதம விகாராதிபதி வணக்கத்திற்குரிய கொலன்னாவ தம்மிக்க தேரர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர், இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரியநாத் […]

ஆசியா

தெற்கு பிலிப்பைன்ஸில் வலுவான நிலநடுக்கம் பதிவு!

  • April 16, 2025
  • 0 Comments

தெற்கு பிலிப்பைன்ஸில் புதன்கிழமை (ஏப்ரல் 16) 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது,. இதில் சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. மிண்டானாவோ தீவின் கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கம் 30 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக USGS மேலும் கூறியது. பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம், மலைப்பாங்கான மற்றும் மக்கள் தொகை குறைவாக உள்ள மைதும் நகரத்திலிருந்து தென்மேற்கே சுமார் 43 […]

இலங்கை

இலங்கையில் மத்திய மாகாணத்தை சேர்ந்த சில பாடசாலைகளுக்கு விடுமுறை!தை

  • April 16, 2025
  • 0 Comments

இலங்கை – புனித தலதா மாளிகையின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, கண்டி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல பள்ளிகள் ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 25 வரை மூடப்படும் என்று மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார். அதன்படி, கண்டி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 37 பள்ளிகள் இந்தக் காலகட்டத்தில் மூடப்படும். புனித தலதா மாளிகையின் சிறப்பு கண்காட்சி ஏப்ரல் 18 ஆம் தேதி பிற்பகல் 3:00 மணி […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் NHS நோயாளிகளின் பதிவுகளை உளவு பார்க்கும் சீனா!

  • April 16, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் NHS நோயாளிகளின் பதிவுகளை சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அணுக அனுமதிக்கப்படுவதாக குற்றம் சட்டப்பட்டுள்ளது. தரவுகள் திருடப்படலாம் என்ற அச்சம் இருந்த போதிலும் இவ்வாராக அனுமதிக்கப்படுவதாக குற்றம் சட்டப்பட்டுள்ளது. அரை மில்லியன் நோயாளிகளின் GP பதிவுகள் பல்கலைக்கழகங்கள், விஞ்ஞானிகள் மற்றும் தனியார் நிறுவனங்களால் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய தரவுத்தளமான UK Biobank இல் பதிவேற்றப்படுகின்றன. மேலும் புற்றுநோய்கள், இதய நோய் மற்றும் வயது தொடர்பான நிலைமைகளுக்கு புதிய சிகிச்சைகளை உருவாக்க ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அணுகலுக்கான […]