இலங்கை

இலங்கை: இந்த அரசாங்கம் இடைநடுவிலும் கவிழும் சாத்தியம்- மைத்திரிபால சிறிசேன

எதிர்வரும் காலங்களில் மீண்டும் தேர்தல்களில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றைய தினம் பொதுத் தேர்தலுக்கான தனது வாக்கை, பொலன்னறுவை புதிய நகரத்தின் வித்யாலோக பிரிவெனவில் செலுத்தினார். இந்த அரசாங்கம் ஐந்து வருடங்கள் நிலைத்திருக்கும் என்று கூற முடியாது. இடைநடுவிலும் கவிழும் சாத்தியம் உள்ளது. அதன் காரணமாக நான் தற்போதைக்கு அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளும் எண்ணம் இல்லை. எங்களுடைய சர்வஜன அதிகாரம் கட்சிக்கு மிகச் சிறந்த தலைவர் […]

செய்தி

முதல் T20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி

  • November 14, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. அதில், முதல் டி20 போட்டி கப்பா மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால இப்போட்டி 7 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் வெளியான தகவல்!

  • November 14, 2024
  • 0 Comments

இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லையென்றும் ஜனாதிபதியே அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பாரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரையில் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊரடங்குச் சட்டம் அமுலாகுமா இல்லையா என்பதை உறுதியாகக் கூறமுடியாதென்றும் அவர் மேலும் சுட்டிகாட்டினார்.

இலங்கை

இலங்கையில் கோர விபத்து! குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து

மாத்தளை, லக்கல எலவனகந்த பிரதேசத்தில் இன்று (14) பிற்பகல் பஸ் ஒன்று குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து லக்கல ஊடாக வஸ்கமுவ பகுதிக்கு சென்று கொண்டிருந்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சுற்றுலா சென்று கொண்டிருந்த போதே பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

இந்தியா

அரசியலமைப்புச் சட்டத்தைப் படிக்காதவர் பிரதமர் மோடி: ராகுல் கடும் விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்புச் சட்டத்தை படிக்காததால் அவருக்கு அது வெறுமையாகத் தெரிவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி வெறுமனே அரசியலப்புப் புத்தகத்தைக் காட்டி அரசியல் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ராகுல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பார் பகுதியில் தேர்தலையொட்டி நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை

இலங்கை மக்களுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள செய்தி!

  • November 14, 2024
  • 0 Comments

டிஜிட்டல் திரையில் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என காவல்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற சமயங்களில் பாதுகாப்புப் படையினர் தலையிட்டு கூட்டத்தைக் கலைப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் ஒரு வாரத்திற்கு ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று […]

செய்தி

டெல்லியில் நச்சுப் புகைமூட்டம்; விமானம், ரயில் சேவை மற்றும் அதிகமானோர் மூச்சுப் பிரச்சினையால் பாதிப்பு

  • November 14, 2024
  • 0 Comments

இந்தியத் தலைநகர் புதுடெல்லியும் அதனைச் சுற்றியுள்ள பல நகரங்களும் வியாழக்கிழமையன்று (நவம்பர் 14) கடும் நச்சுப் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டன.அதன் காரணமாக விமான, ரயில் சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டன. இருமல், மூச்சுப் பிரச்சினைக்கு ஆளானதாகக் குடியிருப்பாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் காற்றுத் தூய்மைக்கேடு தொடர்பிலான சுகாதாரப் பிரச்சினைகளுக்கு ஆளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமையன்று டெல்லியின் சராசரி காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (AQI – ஏகியூஐ) தொடர்ந்து 400க்கு மேல் பதிவானது. டெல்லியின் பத்பர்கஞ் […]

இலங்கை

இலங்கை: தேர்தல் சட்டத்தை மீறியதாக இரண்டு வேட்பாளர்கள் உட்பட 51 பேர் கைது

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை இரண்டு வேட்பாளர்கள் உட்பட 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இருபது மாவட்டங்களில் கைது செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஐரோப்பா

ட்ரம்பின் தேர்தல் வெற்றியை தொடர்ந்து உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்!

  • November 14, 2024
  • 0 Comments

டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ரஷ்யா உக்ரேனிய நகரங்களில் அதன் நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களின் தீவிரம் ஒரே வாரத்தில் 44 சதவீதம் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 2022 இல் முழு அளவிலான போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் ட்ரோன் தாக்குதல்களின் அளவும் சிக்கலான தன்மையும் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. கடந்த ஐந்து வாரங்களில் சுமார் 4,500 UAVகள் பகிரப்பட்ட எல்லையை இரு திசைகளிலும் கடந்து சென்றுள்ளன. ட்ரம்பின் […]

ஐரோப்பா

உக்ரைன் போரில் புடினின் மரணத்தை கோரிய ரஷ்ய பெண்ணுக்கு நேர்ந்த கதி!

மாஸ்கோவைச் சேர்ந்த நாடக இயக்குநரும், இரண்டு இளம் குழந்தைகளின் தாயுமான அனஸ்டாசியா பெரெஜின்ஸ்காயாவிற்கு (43 வயது) மாஸ்கோவில் உள்ள இராணுவ நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது, ஜனாதிபதி விளாடிமிர் புடினை படுகொலை செய்ய அழைப்பு விடுத்தது உட்பட, போர்-எதிர்ப்பு கருத்துக்களை ஆன்லைனில் பதிவிட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு போர்க்கால தணிக்கைச் சட்டங்கள், ரஷ்ய இராணுவத்தை இழிவுபடுத்துதல் மற்றும் அதைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்புதல், பயங்கரவாதத்தை நியாயப்படுத்துதல் போன்றவற்றில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். […]