சஜித் பிரேமதாச, எல்.எம். அபேவிக்ரம காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றிய இணைத் தலைவர்களாக தெரிவு
10ஆவது பாராளுமன்றத்தின் இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 10ஆவது பாராளுமன்றத்தின் இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தை மீண்டும் ஸ்தாபிப்பது தொடர்பான கூட்டம் 2025.01.08 ஆம் திகதி இடம்பெற்ற போதே இத்தெரிவு இடம்பெற்றது. இதன்போது, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மற்றும் தேசிய மக்கள் […]