இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

மன்னாரில் அதிர்ச்சி – நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை – இருவர் காயம்

  • January 16, 2025
  • 0 Comments

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அசாத் ஹனீபா இதனை தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி […]

செய்தி

தினமும் காலை 30 நிமிட நடந்தால் உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்

  • January 16, 2025
  • 0 Comments

விடியற்காலையின் அமைதியான சூழலில் வாக்கிங் போவது ஒரு புத்துணர்ச்சியை அள்ளித் தரக் கூடியது. காலை உணவுக்கு முன் விறுவிறுப்பான 30 நிமிட நடை பயிற்சியில் ஈடுபடுவது, உங்கள் உடலில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி ஒரு சிறந்த வழி என்பதை மறுக்க இயலாது. நடைபயிற்சி இதய நோய், வகை 2 நீரிழிவு, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பல தீவிர நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். மேலும், நடைபயிற்சி தசைகளை வலுப்படுத்துகிறது. இது குறித்து விரிவாக அறிந்து […]

மத்திய கிழக்கு முக்கிய செய்திகள்

காஸா போர் நிறுத்த அறிவிப்பு – வீதிகளில் மக்கள் கொண்டாட்டம்

  • January 16, 2025
  • 0 Comments

காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸும் இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. போர் நிறுத்தம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 15 மாதங்களாக நீடிக்கும் போரில் பிணை பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 6 வாரங்களுக்குச் போர் நிறுத்தப்படும்.அதன் பிறகு காஸா வட்டாரத்திலிருந்து இஸ்ரேலியத் துருப்புகள் கட்டங்கட்டமாக வெளியேற்றப்படுவார்கள். கைதிகளின் பரிமாற்றமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பாலஸ்தீன மக்கள் வீதிகளில் ஒன்றுகூடி கொண்டாடிவருகின்றனர். விளம்பரம் கான் யூனிஸில் மக்கள் வீதிகளில் […]

உலகம் செய்தி

பல விமானங்கள் தாமதமானதற்கு காரணமாகிய எலோன் மஸ்க்

  • January 16, 2025
  • 0 Comments

சமீபத்திய வாரங்களில் குவாண்டாஸ் விமானங்களில் ஏராளமான தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இது எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ரொக்கெட்டுகளின் குப்பைகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் குவாண்டாஸுக்கு அறிவித்துள்ளது. இந்த ரொக்கெட்டின் குப்பைகள் தெற்கு இந்தியப் பெருங்கடல் வழியாக பூமிக்குத் திரும்பும் என்று குவாண்டாஸுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கடந்த சில வாரங்களாக சிட்னியில் இருந்து ஜோகன்னஸ்பர்க்கிற்கு செல்லும் பல விமானங்களில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டாஸ் செயல்பாட்டுத் தலைவரான பென் ஹாலண்ட், இது […]

பொழுதுபோக்கு

நடிகர் சைஃப் அலி கான் மீது கத்தி குத்து! அதிர்ச்சியில் பாலிவுட்

  • January 16, 2025
  • 0 Comments

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் திருட வந்த நபர்களை தடுக்க முயன்றபோது நடிகர் சைஃப் அலி கானை திருடர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் லீலாவதி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு இருப்பதாaக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை கரீனா கபூர் தனது கணவர் சைஃப் அலி கானுக்கு நேர்ந்த கத்திக் குத்து சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளார். திருட்டு முயற்சி மட்டும்தானா அல்லது கொலை முயற்சியா என்கிற கோணத்தில் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அச்சுறுத்தும் காட்டுத் தீ – 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆபத்தில்

  • January 16, 2025
  • 0 Comments

கலிபோர்னியாவில் ஒரு வாரமாகப் பரவி வரும் காட்டுத்தீ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பல மாநிலங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, கடுமையான அழிவை ஏற்படுத்தி வருவதால், இன்னும் குறைவதற்கான அல்லது குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று CNN ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த காட்டுத்தீயால் லாஸ் ஏஞ்சல்ஸில் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்னும் கடுமையான ஆபத்தில் இருப்பதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று அந்தப் பகுதிகளில் பலத்த காற்று வீசியுள்ளது. இதன் விளைவாக, காட்டுத்தீ வேகமாகப் […]

விளையாட்டு

12 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி எடுத்த தீர்மானம்

  • January 16, 2025
  • 0 Comments

வரவிருக்கும் ரஞ்சி டிராபி முதல் தரக் கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் ஆடப்போவது உறுதியான நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் கடுமையாக சொதப்பினாலும் ஓய்வு அறிவிக்க மனம் வராத விராட் கோலி தன் ஃபார்மை மேம்படுத்திக் கொள்ள டெல்லி அணிக்காக ஆடுவார் என்று உத்தேச அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், கோலி இன்னமும் ஆடுவாரா மாட்டாரா என்ற சந்தேகமே நீடிக்கிறது. அவர் லண்டனுக்குச் சென்று விட்டார். அவர் இனி இங்கு வந்து உள்நாட்டுக் கிரிக்கெட் ஆடுவதெல்லாம் சாத்தியமில்லை […]

உலகம்

உடற்பருமனால் போராடும் மக்கள் – விளக்கத்தை மாற்றியமைக்க முயற்சியில் நிபுணர்கள்

  • January 16, 2025
  • 0 Comments

உலகில் தற்போது ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் உடற்பருமனாக உள்ள நிலையில் உடற்பருமனைத் தீர்மானிக்கும் வழியை மாற்ற நிபுணர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். உலகெங்கும் மருத்துவர்கள் தற்போது Body Mass Index (BMI) எனும் உடல் எடையையும் உயரத்தையும் வைத்து உடற்பருமனைக் கண்டறிகின்றனர். எனினும் அது மட்டும் போதாதென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நோய்கள், ஒருவரின் இடுப்பளவு போன்ற அம்சங்களையும் கருத்தில் கொள்வது அவசியம் என நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். 56 நிபுணர்களும் 76 மருத்துவ அமைப்புகளும் ஆதரவளிக்கும் கட்டமைப்பைப் பற்றி The […]

ஐரோப்பா

பிரித்தானியாவுக்கு சட்டவிரோத உயிராபத்தான கடற்பயணம் – சிக்கிய 76 பேர்

  • January 16, 2025
  • 0 Comments

பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோத உயிராபத்தான கடற்பயணம் மேற்கொண்டிருந்த 76 அகதிகள் கலே கடற்பிராந்தியத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை இரவு இக்கடற்பயணத்தை பா-து-கலே மாவட்டத்தின் வடக்கு பகுதியில் அகதிகள் மேற்கொண்டிருந்தனர். காற்று ஊதக்கூடிய படகு ஒன்றில் குறித்த 76 அகதிகளும் பயணித்திருந்தனர். அகதிகளின் கடற்பயணத்தை பார்த்துவிட்டு ஜொந்தாமினர் தகவல் தெரிவிக்க, அவர்களை சட்டவிரோத கடற்பயணத்தை கண்காணிக்கும் சிறப்பு அமைப்பான Cross Gris-Nez அதிகாரிகள் மீட்டிருந்தனர். கடந்த ஆண்டு மிக அதிகமான அகதிகள் கலே மற்றும் நோர் […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் பல லட்சம் பேர் தொழில்களை இழக்கும் அபாயம் – ட்ரம்பால் நேர்ந்த விபரீதம்

  • January 16, 2025
  • 0 Comments

கனடாவில் சுமார் ஐந்து லட்சம் பேர் தொழில்களை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவின் ஏற்றுமதிகள் மீது வரி விதித்தால் அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரம்ப் கனடாவின் ஏற்றுமதிகள் மீது வரியை விதித்தால் மாகாணத்தில் சுமார் ஐந்து லட்சம் பேர் தொழில்களை இழக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் […]