மன்னார் துப்பாக்கிச் சூடு; விசாரணைகள் தீவிரம்
மன்னார், நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவரே இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில், மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் மன்னார் […]