போர்நிறுத்தம் தற்காலிகமானது – மீண்டும் பரபரப்பு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமா்
ஹமாஸ் அமைப்பு உடனான போா்நிறுத்தத்தை தற்காலிகமானது என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். அவசியம் எழும் சூழலில் தொடா்ந்து தாக்குதல் நடத்தப்படும் என அவர் மீண்டும் எச்சரிக்கை விடுத்து்ளார். போா்நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பு நாட்டுமக்களிடம் உரையாற்றிய அவர், ‘அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவும் எனக்கு இருக்கிறது. கடந்த புதன்கிழமைகூட அவரிடம் பேசினேன். லெபனான் மற்றும் சிரியாவில் இஸ்ரேலின் ராணுவ வெற்றிகளே ஹமாஸ் உடனான போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதற்கு காரணம். மத்திய கிழக்கு பிராந்தியத்தின் […]