கானாவில் ஹெலிகாப்டர் விபத்து – இரு அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு
கானா நாட்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஹெலிகாப்டர் நொறுங்கியதில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் முக்கிய அரசியல் தலைவர்களும் அடங்குவர். அவர்கள் Z9 விமானப்படை ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். ஹெலிகாப்டரின் ரேடார் செயலிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மாண்டோரின் குடும்பத்திற்குக் கானாவின் அரசாங்கம் இரங்கல் தெரிவித்தது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணத்தை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.