வட கொரியாவுக்கான சாலைப் பால கட்டுமானப் பணிகளை ஆரம்பித்துள்ள ரஷ்யா – பிரதமர்
வடகொரியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் சாலைப் பாலத்தைக் கட்டும் பணிகள் தொடங்கிவிட்டதாக ரஷ்யப் பிரதமர் மிக்காயில் மிஷுஷ்டின் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான உத்திபூர்வப் பங்காளித்துவத்தை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இப்பாலம் கட்டப்படுவதாக அவர் கூறினார். ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே ஏற்கெனவே ஒரு பாலம் உள்ளது.அதற்கு நட்புப் பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது.கொரியப் போருக்குப் பிறகு அந்தப் பாலம் 1959ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கான துவக்க விழாவில் மிஷுஷ்டின் கலந்துகொண்டு பேசினார். இப்பாலம் ரஷ்யா-வடகொரியா உறவுகளுக்கு […]