உலகம்

இந்தோனேசியாலில் பண்ணையிலிருந்து தப்பிய முதலைகள் – அச்சத்தில் மக்கள்

  • January 20, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் Batam தீவில் உள்ள முதலைப் பண்ணையிலிருந்து வெள்ளத்தினால் முதலைகள் தப்பியதால் அச்சமான நிலைமை ஏற்பட்டுள்ளது. பண்ணையைச் சுற்றி இருந்த தடுப்பு கன மழையினால் சரிந்தது. அங்குள்ள உள்ளூர் மீனவர்கள் தங்களுடைய பாதுகாப்பை நினைத்து மீன் பிடிக்கச் செல்ல அஞ்சுகின்றனர். அதற்குப் பதிலாக அவர்கள் தப்பிய முதலைகளைத் தேடும் பணிகளில் ஈடுபடுகின்றனர். எத்தனை முதலைகள் தப்பின என்று சரியாகத் தெரியவில்லை என்றாலும் இதுவரை 23 முதலைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இன்னும் அதிகமான முதலைகள் பிடிபடாமல் உள்ளன. குடியிருப்பு […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் அடுத்த சீசன் தொகுப்பாளரில் மாற்றமா? விஜய் டிவி வெளியிட்ட அதிசயம்

  • January 20, 2025
  • 0 Comments

பிக் பாஸ் தமிழ் எட்டாவது சீசன் வெற்றிகரமாக நேற்று முடிந்து இருக்கிறது. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ஒரு சில வாரங்களிலேயே முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் என்று தெரிந்துவிட்டது. மற்ற சீசன்களை ஒப்பிடும்போது இந்த சீசனில் சண்டை கொஞ்சம் கம்மி தான் என்று சொல்லலாம். தீபக் மற்றும் மஞ்சரி எலிமினேஷன் ரசிகர்களுக்கு பெரிய அதிருப்தியை கொடுத்தது. சௌந்தர்யாவின் குழந்தைத்தனம் அனைவரையும் ரசிக்க வைத்தது. இதையெல்லாம் தாண்டி நிகழ்ச்சியின் சுவாரசியம் என்னவென்றால் அது புது […]

செய்தி மத்திய கிழக்கு

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு

  • January 20, 2025
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் 90 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை அறிவித்துள்ளது. நேற்று தொடங்கிய போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த கைதிகளில் 69 பெண்கள் மற்றும் 21 ஆண்கள் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஹமாஸால் பிடிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தி வாழ்வியல்

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  • January 20, 2025
  • 0 Comments

வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் கிடைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் தெரிந்துகொண்டு உங்கள் உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ஏற்படும் தொற்று நோய்கள் வெகுவாக பரவி வருகிறது. இதிலிருந்துப் பாதுகாத்துக் கொள்ள உங்களால் முடிந்த அளவுக்கு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும். தினசரி காலையில் வெந்நீர் குடிப்பதால் உங்கள் குடல் ஆரோக்கியமாக செரிமானமாகும். அன்றாடம் உணவு சாப்பிடும் முன்பும் அதற்குப் பின்பும் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். மாறிவரும் காலநிலை சூழ்நிலைக்கேற்ப […]

இலங்கை

விசா விதிகளை கடுமையாக்கும் ஆஸ்திரேலியா

  • January 20, 2025
  • 0 Comments

Protection Visaவிற்கு (Subclass 866) விண்ணப்பிக்கும்போது தவறான தகவல்களை வழங்கும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. உங்கள் சார்பாக வேறு யாராவது உங்கள் Protection Visa விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தாலும், உங்கள் விண்ணப்பத்தில் உள்ள அனைத்தும் உண்மை என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். நீங்கள் எதற்காக விண்ணப்பிக்கிறீர்கள், என்ன தகவல் வழங்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல், உங்கள் சார்பாக பாதுகாப்பு விசாவிற்கு விண்ணப்பிக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் மீண்டும் Tiktok – டிரம்ப வழங்கிய வாக்குறுதி

  • January 20, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் Tiktok செயலி அதன் சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக இன்று பொறுப்பேற்கும் டிரம்ப், தாம் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்கர்கள் TikTok சேவைகளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து சேவைகள் தொடங்குகின்றன. அவரது முயற்சிகளால் செயலியை மீண்டும் அமெரிக்காவில் செயல்படுத்த முடிவதாக TikTok அறிவித்தது. 170 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு TikTok சேவை வழங்கப்படுகிறது. அதன் வழி 7 மில்லியனுக்கும் அதிகமான சிறிய வரத்தகங்கள் செழிக்கின்றன. அதற்காக TikTok டிரம்புக்கு […]

இலங்கை செய்தி

இலங்கையில் மற்றுமொரு கோர விபத்தில் சிக்கிய பேருந்து – 14 பேர் காயம்

  • January 20, 2025
  • 0 Comments

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. சேருநுவர – கந்தளாய் வீதியில், சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு அருகில் பேருந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் சுமார் 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 14 பேர் சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் 9 பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஆரோக்கியத்திற்கான புதிய அம்சங்களுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட்வொட்ச்

  • January 20, 2025
  • 0 Comments

ஒன்பிளஸ் வாட்ச் 2 கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதன் அடுத்த வெர்ஷனான ஒன்பிளஸ் வாட்ச் 3 -யின் வெளியீடு, அதன் அம்சங்கள் குறித்து சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஒரு தகவலில், ஒன்பிளஸ் வாட்ச் 3 -இல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சில குறிப்பிட்ட அம்சங்கள் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்பிளஸ் வாட்ச் 2 கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதன் […]

செய்தி விளையாட்டு

கம்பீர் – ரோகித் இடையே வெடித்த மோதல்?

  • January 20, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டிராபியை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. தவிர, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் தவறவிட்டது. இதனால், இந்திய அணிமீது அதிகம் விமர்சனம் கிளம்பியது. இது, பிசிசிஐக்குள்ளும் வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதாவது, இந்தத் தோல்வி தொடர்பாக தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் – கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடையேயும், காம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கருக்கு இடையேயும் மோதல் இருப்பதாகத் தகவல் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பெண்களுக்கு மர்ம நபர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – பொலிஸார் எச்சரிக்கை

  • January 20, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் வாகனங்களில் பயணிக்கும் பெண்களுக்கு மர்ம நபர்களால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்துமிடங்களுக்கு வரும் மர்ம நபர்களால் பெண்களின் உடமைகளை கொள்ளையிடுவதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக சுப்பர் மார்க்கெட் வாசல்களுக்கு வாகனங்களில் வரும் பெண்களே இந்த கும்பலால் குறி வைக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. வாகனங்களில் பெண்கள் இருந்தால் பின் பகுதியில் உள்ள ஜன்னல்களை யாரோ ஒருவர் வந்து தட்டி வெளியே வந்து பார்க்குமாறு கோருகின்றனர். வாகனத்தின் பின்னால் டயருக்கு கீழ் சில நாணயங்கள் கிடப்பதாகவும் […]