ஏலத்துக்கு விடப்படும் புத்தர் எச்சங்களுடன் இணைக்கப்பட்ட நகைகள்
புத்தரின் உடலில் இருந்ததாகக் கூறப்படும் நகைகள் வரும் புதன்கிழமை (மே 7) ஏலத்துக்கு வரவுள்ளன. நவீன காலத்தின் ஆக ஆச்சரியமான தொல்பொருளியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இவை, ஹாங்காங்கில் சோத்பி கழகத்தில் ஏலத்துக்கு விடப்படும். இந்த நகைகள், 1898ஆம் ஆண்டு இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை யாரும் அதிகமாகப் பார்த்ததில்லை. தனியார் பிரிட்டிஷ் அமைப்பு ஒன்று இவற்றைக் கவனித்து வந்துள்ளது.இப்போது இவை ஏலத்துக்கு விடப்படவுள்ள நிலையில் சிறிதளவு அதிருப்தியும் எழுந்துள்ளது. புத்தர் பிறந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் அவரின் உடல் […]