ஐரோப்பா

ரஷ்யா மீது தீவிரமாக ஏவுகணை தாக்குதல் நடத்திய உக்ரைன் – பற்றி எரியும் ஆலைகள்!

  • January 24, 2025
  • 0 Comments

மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கே 112 மைல் தொலைவில் உள்ள ராட்சத ரியாசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது மற்றொரு தாக்குதலில் இஸ்கந்தர் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான மைக்ரோசிப்களை தயாரிக்கும் ஒரு ஆலையும் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  

இந்தியா

டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமானங்கள், ரயில் சேவைகள் பாதிப்பு

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகின்ற காரணத்தினால் விமானங்கள், ரெயில்கள் வருகையில் தாமதமாகின. கடும் பனிமூட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை பல விமானங்கள் தாமதமாக வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால், பயணிகள் பெரும் அவதியடைந்தனர். டெல்லி சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், புதுப்பிக்கப்பட்ட விமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டு […]

இலங்கை செய்தி

இலங்கையில் தலைசுற்ற வைக்கும் பச்சை மிளகாயின் விலை – 1800 ரூபாவிற்கு விற்பனை!

  • January 24, 2025
  • 0 Comments

இலங்கையில் பச்சை மிளகாயின் விலை முன்னெப்போது இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. கிலோ ஒன்றின் விலை   1780 – 1800 வரை விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விலைகளில் ஏற்பட்ட திடீர் உயர்வால் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாரஹேன்பிட்டி பொருளாதார மையத்தின்படி, பச்சை மிளகாயின் மொத்த விலை கிலோவுக்கு ரூ. 1,780 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் உள்ளூர் சந்தைகளில் விலை ரூ. 1,800 ஐ எட்டியுள்ளது. கூர்மையான விலை உயர்வு […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் வீசும் ஈயோ புயல் : மின்வெட்டு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • January 24, 2025
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும் புயல் எச்சரிக்கை அமுலில் உள்ளது. சில பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அயர்லாந்தின் கால்வேயில் இன்று காலை 5 மணிக்கு 114 மைல் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வேறு எங்கும் பயணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈயோ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த புயல் காரணமாக விமானங்கள், ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மின்வெட்டு சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.  

ஆசியா

சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய செயற்கை சூரியனை உருவாக்கிய சீனா!

  • January 24, 2025
  • 0 Comments

சீனா சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சோதனையைச் சீனா வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளது. இது வரும் காலத்தில் மின்சார தேவையை இலகுவாக பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா அணுக்கரு இணைவு (nuclear fusion) பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது. ஈஸ்ட் எனப்படும் எக்ஸ்பெரிமெண்டல் அட்வான்ஸ்டு சூப்பர் கண்டக்டிங் டோகாமாக் எனப்படும் இதை ஆய்வாளர்கள் ‘செயற்கை சூரியன்’ என்றும் கூட அழைக்கிறார்கள். இந்த ஃப்யூஷன் எனர்ஜி ரியாக்டரில் உருவான பிளாஸ்மா […]

பொழுதுபோக்கு

நடிகர் ஜெயசீலனின் உயிரை பறித்த மஞ்சள் காமாலை நோய்..

  • January 24, 2025
  • 0 Comments

பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் அடியாட்கள் கூட்டத்தில் நடித்து பிரபலமான ஜெயசீலன் மஞ்சள் காமாலை நோய் தீவிரம் அடைந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தகவலை அறிந்த அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா, போன்ற படங்களில் இவர் நடித்திருந்தார். 40 வயதாகும், இவர் கடந்த இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் […]

பொழுதுபோக்கு

ஆஸ்கர் ரேஸில் இருந்து நீக்கப்பட்டது கங்குவா… ஆடுஜீவிதமும் அவுட்….

  • January 24, 2025
  • 0 Comments

திரைத்துறையின் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இவ்விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 97-வது ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் 2-ந் தேதி அமெரிக்காவில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விருது விழாவுக்கான பரிந்துரைப் பட்டியலில் 10 இந்தியப் படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அதன் இறுதிப்பட்டியலில் என்னென்ன படங்கள் இடம்பெற்றிருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி […]

உலகம்

சீரற்ற வானிலை : கல்வியை இழந்த 242 மில்லியன் குழந்தைகள் – வறிய நாடுகளுக்கே அதிக பாதிப்பு!

  • January 24, 2025
  • 0 Comments

கடந்த ஆண்டு வெப்ப அலைகள், சூறாவளிகள், வெள்ளம் மற்றும் பிற தீவிர வானிலை காரணமாக 85 நாடுகளில் குறைந்தது 242 மில்லியன் குழந்தைகளின் பள்ளிப் படிப்பு தடைபட்டதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் காலநிலை ஆபத்துகள் காரணமாக உலகம் முழுவதும் பள்ளிக்குச் செல்லும் ஏழு குழந்தைகளில் ஒருவர் வகுப்பறைக்கு வெளியே வைக்கப்பட்டதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. ஆசியா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. […]

இலங்கை

இலங்கை – வாகனங்கள் மட்டுமல்ல மின்னணு உபகரணங்களின் விலைகளும் அதிரிக்கப்பட வேண்டும் : துணை அமைச்சர்!

  • January 24, 2025
  • 0 Comments

IMF நிபந்தனையின் காரணமாக, இறக்குமதிக்கு முன்பே வாகனங்களின் விலைகள் உயர்ந்துள்ளன என்று துணை நிதியமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார். குத்தகை நிறுவனங்களுக்கு சாதகமாக வாகன விலைகள் உயர்த்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவுகள் தவறானவை என்றும், NPP அரசாங்கம் முழு பொருளாதாரத்தின் செயல்பாட்டையும் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கிறது என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு சாதகமாக அல்ல என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனவரி மாதத்தில் புகையிலை, மதுபானம், வாகனங்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள் […]

இந்தியா

இந்தியா – குஜராத்தில் உலகின் மிகப்பெரிய தரவு மையத்தை அமைக்கவுள்ள முகேஷ் அம்பானி

  • January 24, 2025
  • 0 Comments

இந்தியப் பெருஞ்செல்வந்தரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் உலகிலேயே ஆகப் பெரிய தரவு மையத்தை அமைக்கத் திட்டமிட்டு வருவதாக புளூம்பெர்க் செய்தி தெரிவிக்கிறது.அம்மையம் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் அமையவுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் என்விடியா (NVIDIA) நிறுவனத்திடமிருந்து ‘ஏஐ’ பகுதி மின்கடத்திகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சென்ற ஆண்டு அக்டோபரில் நடந்த என்விடியா ஏஐ உச்சநிலை மாநாட்டின்போது, இந்தியாவில் ஏஐ உள்கட்டமைப்பை உருவாக்க இணைந்து செயல்படவுள்ளதாக ரிலையன்சும் என்விடியாவும் […]