இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

யாழில் ஆதிக்கம் செலுத்தியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி

  • May 7, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ள நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகர சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை, வலிகாமம் மேற்கு பிரதேச சபை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை, பருத்தித்துறை […]

ஐரோப்பா

புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை – தேவாலயத்தில் அமைக்கப்பட்ட புகைபோக்கி

  • May 7, 2025
  • 0 Comments

புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கும் பேராயர்களின் கூட்டம் இன்று வத்திகனில் தொடங்குகிறது. 133 பேராயர்கள் தனிமையில் அந்தப் பணியை மேற்கொள்வர். இதனை முன்னிட்டு Sistine Chapel தேவாலயத்தின் கூரையில் புகைபோக்கி அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து கரும்புகை வந்தால் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை என்று அர்த்தம். வெண்புகை வந்தால் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்று பொருள்படும். உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு வத்திகனில் கூட்டு வழிபாடு தொடங்கும். பின்னர் மாலை 4.30 மணிக்குப் பேராயர்கள் ரகசியப் பிரமாணம் எடுத்துக் கொள்வர். […]

இலங்கை

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வவுனியா மாவட்ட முடிவுகள்

  • May 7, 2025
  • 0 Comments

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய வவுனியா மாநகர சபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், வவுனியா வடக்கு பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும் கைப்பற்றியுள்ளன. வவுனியா மாநகர சபை (DTNA) ஜனநாயக தமிழ் தேசிய […]

இலங்கை

வெளிவரும் தேர்தல் முடிவுகள் – கவனத்தை ஈர்த்த சஜித்தின் முகநூல் பதிவு

  • May 7, 2025
  • 0 Comments

உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கும் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது முகநூலில் சதுரங்கம் விளையாடும் படத்தை பதிவிட்டுள்ளார். இதன் மூலம் உள்ளுராட்சிசபைகளில் ஆட்சியமைப்பதற்கு எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் அல்லது உடன்பாடுகள் அவசியம் என்பதை அவர் கோடிட்டுக்காட்டியுள்ளார். பல உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

  • May 7, 2025
  • 0 Comments

2025 உள்ளூராட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளார். உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுவரை வெளியாகிய உத்தியோகபூர்வ முடிவுகளின்படி, 239 உள்ளூராட்சி மன்றங்களில் 200 மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது. 94 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. மீதமுள்ள மன்றங்களில், பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை […]

விளையாட்டு

கட்டாய வெற்றி நெருக்கடியில் களமிறங்கும் கொல்கத்தா

  • May 7, 2025
  • 0 Comments

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சிஎஸ்கேவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது. அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 11 புள்ளிகளை பெற்று […]

இலங்கை

தேர்தலில் வாக்களிப்பதனை தவிர்த்த மைத்திரி, கோட்டாபய, மஹிந்த

  • May 7, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் நேற்று வாக்களிக்க வாக்குச் சாவடிகளுக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வாக்களிக்க வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அவரது வலது முழங்காலுக்கும் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கோட்டாபய ராஜபக்சவும் மைத்ரிபால சிறிசேனவும் வேறு சில தனிப்பட்ட காரணங்களால் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், முன்னாள் ஜனாதிபதி […]

இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

Operation Sindoor – பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை!

  • May 7, 2025
  • 0 Comments

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் எல்லைகளில் வான் பாதுகாப்பு அமைப்புகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலையும் பிறப்பித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் போர்ப் பதற்றம் விரைவில் தணியும் என்றார். இரு நாடுகளும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும், ராணுவ நடவடிக்கைகளில் இருந்தும் இரு நாடுகளும் பின்வாங்க வேண்டும் […]

இலங்கை

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – கிளிநொச்சி மாவட்ட முடிவுகள்

  • May 7, 2025
  • 0 Comments

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. கரைச்சி பிரதேச சபை (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 20,962 வாக்குகள் – 20 உறுப்பினர்கள் (NPP) தேசிய மக்கள் சக்தி – 7,319 வாக்குகள் – 6 உறுப்பினர்கள் (DTNA) ஜனநாயக […]

இலங்கை

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – முல்லைத்தீவு மாவட்ட முடிவுகள்

  • May 7, 2025
  • 0 Comments

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளிட்ட 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. மாந்தை கிழக்கு பிரதேச சபை (ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,364 வாக்குகள் – 4 உறுப்பினர்கள் (SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 990 வாக்குகள் […]

Skip to content