டிரம்பின் வர்த்தகப் போருக்கு மத்தியில் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ள அமெரிக்கா, சீனா
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போரைத் தணிக்க முற்பட அமெரிக்க, சீன அதிகாரிகள் இந்த வாரம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவுள்ளனர். சுவிட்சர்லாந்தில் மே 9 முதல் 12 வரை நடைபெறும் பேச்சுவார்த்தையில் சீனத் துணைப் பிரதமர் ஹி லிஃபெங் கலந்துகொள்வார் என சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. அமெரிக்காவின் தரப்பில் நிதி அமைச்சர் ஸ்காட் பெசண்ட்டும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீரும் பங்கேற்கவுள்ளதாக அவர்களின் அலுவலகங்கள் தெரிவித்தன. அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அதிபர் டோனல்ட் […]