பல தசாப்தங்கள் காணாத மோசமான மோதல் – மனவேதனையை வெளிப்படுத்திய பாகிஸ்தான் மக்கள்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் தொடரும் நிலையில் அது பல தசாப்தங்கள் காணாத மோசமான மோதல் என்று பாகிஸ்தானிய மக்கள் தெரிவித்துள்ளனர். தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள ஒரு சந்தைக்கு வெளியே மக்களைச் சந்தித்துப் பேசியது சர்வதேச ஊடகத்திடம் மக்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர். “இந்தியாவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதைத் தவிரப் பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை” என கடைக்காரர்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தமது பாதுகாப்பைப் பற்றி கவலையில்லை என்று கூறிய அவர் இந்த மோதல் எப்போது முடியும் என்று யோசிப்பதாக குறிப்பிட்டுள்ளார். […]