உலகம்

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை உயர்வு

  • May 11, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இன்றைய தினம் வெளியான தகவலுக்கமைய, இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.02 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.91 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.79 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு […]

இலங்கை

இலங்கையில் அச்சுறுத்தும் சிக்குன்குனியா தொடர்பில் எச்சரிக்கை

  • May 11, 2025
  • 0 Comments

இலங்கையில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்ட மற்றும் குறுகிய காலத்திட்டம் ஒன்றைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 18,749 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், மழையுடனான வானிலையினால் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, காலி, […]

ஐரோப்பா

உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயணித்து சாதனை படைத்த ஜெர்மன் இளைஞன்

  • May 11, 2025
  • 0 Comments

195 நாடுகளுக்குப் பயணம் செய்த பிறகு, 23 வயதான ஜெர்மன் நபர் ஒருவர் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்த இளம் வயதுடையவர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவை லூகா பெர்ட்மெங்கஸ், இப்போது உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளுக்கும் பயணம் செய்த இளைஞன் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். நான்கரை ஆண்டுகள் பயணம் செய்து 5 கடவுச்சீட்டுகளை முத்திரைகளால் நிரப்பிய பிறகு, 23 வயதான அவர் பசிபிக் தீவு நாடான பலாவில் தனது […]

இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் அதிகாலையில் உலுக்கிய கோர விபத்து – அதிகரித்த மரணங்கள்

  • May 11, 2025
  • 0 Comments

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 11 ஆக அதிகரித்துள்ளது. பேருந்து ஓட்டுநர் உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் இறந்த 11 பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் இந்த சம்பவம் […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை

  • May 11, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில், 50 மில்லி மீட்டருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலும் புத்தளம், காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் […]

விளையாட்டு

ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்த இங்கிலாந்து அழைப்பு

  • May 11, 2025
  • 0 Comments

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், எஞ்சிய போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்திக் கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் நடந்து வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையறையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான 18வது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. […]

இலங்கை

கொட்டாஞ்சேனை மாணவி தொடர்பான விசாரணைகளை சீர்குலைக்கும் சதிகள்?

  • May 11, 2025
  • 0 Comments

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரத்தில் நீதியை கிடைக்க விடாமல் செய்யும் நோக்கில் சில தரப்பினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. யுனைட்டட் ஹியூமன் ரைட்ஸ் என்ற மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் பிரதீபா வர்ணகுலசூரிய இது தொடர்பில் குற்றம் சுமத்தியுள்ளார். ஊடக சந்திப்பொன்றில் இதனை தெரிவித்த அவர், திட்டமிட்ட வகையில், விசாரணைகளைக் குழப்புவதற்கான சதிகளில் இந்த தரப்பினர் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் கற்பித்த பாடசாலையைச் சேர்ந்த சில ஆசிரியர்கள் குறித்த சிறுமி தொடர்பான […]

இன்றைய முக்கிய செய்திகள்

பல தசாப்தங்கள் காணாத மோசமான மோதல் – மனவேதனையை வெளிப்படுத்திய பாகிஸ்தான் மக்கள்

  • May 11, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் தொடரும் நிலையில் அது பல தசாப்தங்கள் காணாத மோசமான மோதல் என்று பாகிஸ்தானிய மக்கள் தெரிவித்துள்ளனர். தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள ஒரு சந்தைக்கு வெளியே மக்களைச் சந்தித்துப் பேசியது சர்வதேச ஊடகத்திடம் மக்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர். “இந்தியாவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதைத் தவிரப் பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை” என கடைக்காரர்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தமது பாதுகாப்பைப் பற்றி கவலையில்லை என்று கூறிய அவர் இந்த மோதல் எப்போது முடியும் என்று யோசிப்பதாக குறிப்பிட்டுள்ளார். […]

செய்தி

இலங்கையில் அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – ஐவர் பலி – பலர் படுகாயம்

  • May 11, 2025
  • 0 Comments

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 35க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரன்டிஎல்ல பகுதியில் பேருந்து பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களை அவசரமாக மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கதிர்காமத்திலிருந்து நுவரெலியா […]

இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

சண்டை நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான் – பதிலடி கொடுக்க உத்தரவிட்ட இந்தியா

  • May 11, 2025
  • 0 Comments

இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே அதை பாகிஸ்தான் மீறி எல்லையில் தாக்குதல் நடத்தியது. இந்த சண்டை நிறுத்த மீறலை நிறுத்த பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி சனிக்கிழமை இரவு தெரிவித்தாா். பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு உரிய பதிலடி கொடுக்கவும் ஆயுதப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவா் கூறினாா். இந்நிலையில், அமெரிக்க […]

Skip to content