இந்தியாவில் வகுப்பறையில் வைத்து கல்லூரி மாணவரைத் திருமணம் செய்துகொண்ட பேராசிரியை!
மேற்கு வங்க மாநிலத்தில் படித்து வரும் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவரைப் பேராசிரியை ஒருவர் திருமணம் செய்துகொள்ளும் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இம்மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள மௌலானா அப்துல் கலாம் ஆசாத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வகுப்பறையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், திருமணம் ஒரு நாடக நிகழ்வுக்காக நடத்தப்பட்டதாக பேராசிரியை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பரவி வரும் காணொளியில் மணப்பெண் உடையணிந்து காணப்படும் பேராசிரியை, முதலாம் ஆண்டு […]