மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் சற்றுமுன் ஆரம்பம்
தமிழரசுக் கட்சியின், மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்.மாவிட்டபுரம் பகுதியில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக மாவை சேனாதிராஜாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. நிலையில், தற்போது சமய கிரியைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது, உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பெருமளவான பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மாவை சேனாதிராஜாவுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.