ஐரோப்பா

ரஷ்யா காட்டுத்தீயால் 21 பேர் உயிரிழப்பு!

  • May 11, 2023
  • 0 Comments

ரஷியா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் ரஷியாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென்,  ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள்,  ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. காட்டுத்தீ […]

வட அமெரிக்கா

WhatsAppயை நம்ப முடியாது; சர்ச்சையை கிளப்பியுள்ள எலான் மஸ்க்கின் பதிவு!

  • May 11, 2023
  • 0 Comments

WhatsAppயை நம்ப முடியாது என ட்விட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஆன்ட்ராய்டு போன் வைத்திருக்கும் பலரும் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்நிலையில், பயனர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “நான் தூங்கிக்கொண்டு காலை 6 மணிக்கு எழுந்து பார்த்தபோது எனது கையடக்க தொலைபேசியின் WhatsAppயை பின்னணியில் மைக்ரோஃபோனைப் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.இதற்கான ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் வெளியீட்டு கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் எலான் மஸ்க் பயனரின் அந்த பதிவிற்கு […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் வங்கி வட்டி விகித உயர்வை அறிவிக்கவுள்ள பாங்க் ஆஃப் இங்கிலாந்து!

  • May 11, 2023
  • 0 Comments

பாங்க் ஆஃப் இங்கிலாந்து இன்று மற்றுமொரு வட்டி விகித உயர்வை அறிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பரவலான பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள 12 ஆவது அதிகரிப்பு இதுவாகும். நிதிச் சந்தைகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இருவரும் 0.25 சதவீத புள்ளிகள் 4.5% ஆக உயரும் என்று பரவலாக எதிர்பார்க்கிறார்கள். கடந்த 2021 டிசம்பரில் வங்கி விகிதம் 0.1% ஆக இருந்தது. இந்நிலையில், கொவிட் நிலைமைகள், உக்ரைன் – ரஷ்ய போர் ஆகியவை பணவீக்க சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது.  குறிப்பாக எரிவாயுவிற்கான […]

செய்தி தமிழ்நாடு

ரயில் மோதி கல்லூரி மாணவி பலி

  • May 11, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் B.optom மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் மாணவி கிருத்திகா (20). இவர் சென்னை, தாம்பரம் அருகே புதிய பெருங்களத்தூரை சேர்ந்தவர்.இவர் வழக்கம் போல் கல்லூரி முடிந்த நிலையில் மாலை வீடு திரும்ப பொத்தேரி ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது சென்னை, எழுப்பூரில் இருந்து தாம்பரம் வழியாக காரைக்குடி செல்லும் விரைவு ரயில் கல்லூரி மாணவி கிருத்திகா மீது மோதியதில் மாணவி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

பொழுதுபோக்கு

“மாமன்னன்” படத்தில் வடிவேலுவின் புதிய படம்! எழுந்தது சர்ச்சை

  • May 11, 2023
  • 0 Comments

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன். இப்படம் ஜூன் 2023ஆம் திகதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து வடிவேலுவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் நடிகர் வடிவேலு தனது கையில் லால் புகைப்படத்தை பச்சை குத்தியுள்ளார். இதை கவனித்த ரசிகர்கள் ஒரு வேலை கர்ணன் படத்தில் வரும் லால் புகைப்படத்தை தான் வடிவேலு மாமன்னன் படத்தில் பச்சை குத்தியுள்ளாரா என கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போதைய திரையுலக ட்ரெண்ட் யூனிவெர்ஸ் கிரியேட் செய்வது […]

ஆசியா

பாகிஸ்தானில் நடைபெறும் மோதல்களில் 8 பேர் உயிரிழப்பு!

  • May 11, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில்  முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பின்னர் நடந்த மோதல்களால்  குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன், 200இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிஐ கட்சியின் தலைவரான இம்ரான் கான் லஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்களும் ஏற்பட்டுள்ளன. இந்த மோதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 290 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 1900 பேர் கைது […]

இலங்கை

வீட்டிலிருந்து புறப்பட்டு 100 மீற்றர் சென்ற யுவதி்… 5 நாட்களாக மாயம்!

  • May 11, 2023
  • 0 Comments

பணியாற்றும் நிலையத்துக்கு செல்வதற்காக வீட்டிருந்து புறப்பட்டு 100 மீற்றர் மட்டுமே பயணித்துக்கொண்டிருந்த யுவதியை, கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். அந்த யுவதியை, கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய, மகாவலி கங்கை, இவர உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் கிராமத்தவர்கள், கம்பளை பொலிஸார் இணைந்து தேடிவருகின்றனர். எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா முனவுவரமா என்ற ​யுவதியே காணாமல் போயுள்ளார்.அந்த யுவதி, கெலிஓயா நகரிலுள்ள பாமசியில் பணியாற்றுக்கின்றார் என அந்த யுவதியின் சகோதரர் மொஹமட் இம்ரான் தெரிவித்தார். வீட்டிலிருந்து […]

இலங்கை

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஜிஎஸ்பி சலுகையை பெற்றுக்கொள்ள பாதிப்பாக அமையும் – ஹர்சடி சில்வா!

  • May 11, 2023
  • 0 Comments

இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இலங்கை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடிசில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ள அவர்,  இலங்கை இந்த வருட இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 500 மில்லியன் டொலர் பெறுமதியான வரிச்சலுகையை பெறும் நெருக்கடியை எதிர்கொள்கின்றது என்றும் கூறினார். இலங்கைக்கு அதிகளவு அந்நியசெலவாணியை பெற்றுத்தரும் ஆடைதொழில்துறை இந்த வரிச்சலுகையிலேயே தங்கியுள்ளது எனவும்,  புதிய விதிமுறைகளின் கீழ் இலங்கை […]

ஆசியா

பாக்கிஸ்தானில் பிரதமரின் வீட்டை சேதப்படுத்திய இம்ரான் கான் ஆதரவாளர்கள்

  • May 11, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (70) நேற்று முந்தினம் கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர். இம்ரான்கான் செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், […]

பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன் வந்த சுவடே தெரியாத அளவுக்கு படத்தை எடுக்க உள்ளார் ராஜமவுலி

  • May 11, 2023
  • 0 Comments

பொன்னியின் செல்வன் 2 படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில் ராஜமவுலி மாஸ்டர் பிளான் ஒன்று போட்டுள்ளார். பொன்னியின் செல்வன் வந்த சுவடே தெரியாத அளவுக்கு பிரம்மாண்ட படத்தை இறக்க இருக்கிறார். அதாவது மகாபாரதம் கதையை ராஜமவுலி படமாக எடுக்க இருக்கிறாராம். மகாபாரதம் பல தொலைக்காட்சிகளில் தொடராக ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ராஜமவுலி தனது கற்பனையில் மகாபாரத கதையை எடுக்க இருக்கிறாராம். ஆனாலும் கதையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், கதாபாத்திரங்களை மட்டுமே […]