இலங்கை

பால்மாவின் விலை மேலும் குறைப்பு!

  • May 12, 2023
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை கிலோ ஒன்று 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த மார்ச் மாதத்திலும், ஒரு கிலோகிராம் பால்மா பக்கடின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

PS-2 ஐஸ்வர்யாராயிடம் இதை கவனித்தீர்களா? அளவில் பெரிதாகியதால் ஏற்பட்ட நிலை…

  • May 12, 2023
  • 0 Comments

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தபோது ஐஸ்வர்யா ராய்க்கு காதிலிருந்து ரத்தம் வந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, அரச குல பெண் கதாபாத்திரம் என்பதால் அவருக்கு அளவில் பெரிதான தோடுகள் கொடுக்கப்பட்டன. அவ்வளவு பெரிய தோடுகளை அவர் இதறகு முன் அணிந்ததில்லை. எனவே காதில் அந்த தோடுகளை மாட்ட மாட்ட ஒருகட்டத்தில் காயமாகி ரத்தம் வந்துவிட்டதாம். இதனை உதவி இயக்குநர்களும் மணிரத்னத்திடம் சொல்லவில்லையாம். மேலும், தோடுகளே அணிய முடியாத சூழலும் உருவாகியிருக்கிறது. இதனை ஒருவழியாக தெரிந்துகொண்ட மணிரத்னம், ஒருபக்கம் […]

ஐரோப்பா

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு சிறப்பு தூதரை அனுப்பும் சீனா!

  • May 12, 2023
  • 0 Comments

அரசியல் தீர்வை எட்ட உதவும் முயற்சியில் சீனா அடுத்த வாரம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு சிறப்பு தூதுவரை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. யூரேசிய விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்புப் பிரதிநிதியும் மாஸ்கோவுக்கான முன்னாள் தூதருமான லி ஹுய் போலந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கும் விஜயம் செய்வார் என பெய்ஜிங் தெரிவித்துள்ளது. உக்ரைன்,  ரஷ்யா  போரில் நடுநிலையாக இருப்பதாக சீனா கூறுகிறது, ஆனால் மாஸ்கோவுடன் “வரம்புகள் இல்லை என்று முன்னர் அறிவித்திருந்தது. அதேநேரம்  உக்ரைனுக்கான சமாதானத் திட்டத்தையும் முன்வைத்துள்ளது.  ரஷ்யா தனது […]

உலகம்

அமெரிக்காவில் பீரால் இயங்கும் மோட்டார் சைக்கிளை கண்டுப்பிடித்த இளைஞர்!

  • May 12, 2023
  • 0 Comments

அமெரிக்கா மினசோட்டா மாகாணத்தை சேர்ந்த கே மைக்கல்சன் என்பவர் பீரால் இயங்கும் மோட்டார்சைக்கிளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். மணிக்கு 240 கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த பைக்கிற்கு எரிபொருளுக்கு பதிலாக பீர் பயன்படுத்தப்படுகிறது.  கூடுதலாக வெப்பமூட்டும் சுருளுடன் 14-கேலன் கெக் கொண்டு இயக்கப்படுகிறது. இந்த சுருள் பீரை 300 டிகிரி வரை சூடாக்குகிறது. பின்னர் அது பைக்கை முன்னோக்கி நகரச் செய்யும் முனைகளில் அதிக வெப்பமான நீராவியாக மாறி இயக்குகிறது. முன்னதாக ராக்கெட்- பவர்டு கழிப்பறை ஜெட் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் சோலிடாரில் 26 தாக்குதல்களை நடத்திய உக்ரைன்!

  • May 12, 2023
  • 0 Comments

உக்ரைன், ரஷ்யாவின் சோலிடார் திசையில் 26 தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 1,000 க்கும் மேற்பட்ட துருப்புக்கள் மற்றும் 40 டாங்கிகள் ஈடுப்படுத்தப்பட்டதாக மொஸ்கோ கூறியுள்ளது. எதிரிகள் 95 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள முழு தாக்குதல்களை மேற்கொண்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் அனைத்து தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது.

இலங்கை

200க்கும் அதிகமான மடிக்கணனிகளுடன் விமானநிலையம் வந்த ரஞ்சன்

  • May 12, 2023
  • 0 Comments

நூற்றுக்கணக்கான மடிக்கணனிகளுடன் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (12) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். சிங்கப்பூர், அபுதாபி மற்றும் டுபாயில் உள்ள ஆதரவாளர்களால் மொத்தம் 250 மமடிக்கணனிகள் ரஞ்சன் ராமநாயக்கவிடம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. நன்கொடையாக வழங்கப்பட்ட புதிய மடிக்கணினிகளை ரஞ்சன் ராமநாயக்க இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார். இது குறித்து ரஞ்சன் ராம்நாயக்க கூறுகையில்,மடிக்கணினிகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு வரிச்சலுகைகளை வழங்கிய இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். https://web.facebook.com/watch/?v=764942801786263 அத்துடன் நன்கொடைகளில் ஈடுபட்ட நபர்களுக்கும் […]

ஐரோப்பா

வீடு ஒன்றிலிருந்து உதவி கோரி வந்த அழைப்பு… விரைந்த உதவிக்குழுவினருக்கு நேர்ந்த கதி!

  • May 12, 2023
  • 0 Comments

ஜேர்மனியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து அவசர உதவி கோரி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, பொலிஸாரும் தீயணைப்புக் குழுவினரும் அங்கு விரைந்தனர். மேற்கு ஜேர்மனியிலுள்ள Ratingen என்னும் நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து அவசர உதவி கோரி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, பொலிஸாரும் தீயணைப்புக் குழுவினரும் அங்கு விரைந்தனர். திறந்திருந்த அந்த வீட்டின் அருகே பொலிஸார் செல்லவும், அந்த வீட்டுக்குள்ளிருந்து ஏதோ வெடிக்கவும் சரியாக இருந்துள்ளது. அந்த வெடி விபத்தில், இரண்டு பொலிஸாரும் 10 தீயணைப்பு வீரர்களும் காயமடைந்துள்ளனர். […]

வட அமெரிக்கா

கலிஃபோர்னியாவில் 5.5 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்

  • May 12, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிஃபோர்னியாவின் கிழக்கு கடற்கரைக்கு தென்மேற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில், நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடல் மட்டத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி தமிழ்நாடு

மண்சரிவில் சிக்கி வடமாநில இளைஞர் உயிரிழப்பு

  • May 12, 2023
  • 0 Comments

விழுப்புரம்:- திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணியின் போது மண் சரிவில் சிக்கி வட மாநில இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.இதேபோல் இன்று மாலை திண்டிவனம் ரொட்டி கார தெருவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்றது. அங்கு மேற்கு வங்காளம், ஜல்பைகுரி அடுத்த சைலிஹத் ரானிசேரா டீ கார்டன் பகுதியை சேர்ந்த சுக்மன் மிஞ் […]

இலங்கை

கம்பளையில் காணாமல் போன இளம் பெண் கொலை

  • May 12, 2023
  • 0 Comments

கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் குறித்த இடத்தை அகழ்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதி தற்போது பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் அவ்விடத்தில் சடலம் ஒன்று இருப்பதாக சந்தேகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் Fathima Munawwara என்ற இளம் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.