இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவதற்கு புதிய நடைமுறை
இலங்கையில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு இரண்டு வாரங்களுக்குள் புதிய திறமையான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இதற்கிடையில், முன்கூட்டியே நியமனம் செய்தவர்கள் மாத்திரமே கடவுச்சீட்டைப் பெறுவதற்கு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 0707101060 அல்லது 0707101070 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம் சந்திப்புகளை மேற்கொள்ளலாம். இதேவேளை, நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், விரைவில் வெளிநாடு […]